»   »  சுபா புஞ்சா-மைக் மோகன்

சுபா புஞ்சா-மைக் மோகன்

Subscribe to Oneindia Tamil

மைக் மோகன் நீண்ட இடைவெளிக்குப் பிறகு மேக்கப் போட்டு மிரட்ட வரும் சுட்ட பழம் படத்தில் துப்பறியும் போலீஸ் அதிகாரியாக சுபா புஞ்சா அசத்துகிறார்.

ஒரு காலத்தில் மைக்கும், கையுமாக கமல் போன்ற முன்னணி நடிகர்களுக்கு மிரட்டலாக இருந்தவர் மோகன். என் கையில் ரொம்ப காலமாக இருந்த மைக்கை வாங்க நல்ல வேளையாக மோகன் வந்தார் என்று கமலே கூறியதுண்டு. அந்த அளவுக்கு கிட்டத்தட்ட அத்தனை படத்திலும் பாட்டுப் பாடியே பயமுறுத்தியவர் மோகன்.

காலப் போக்கில் மோகனின் செல்வாக்கு மங்கிப் போனது. சினிமாவிலிருந்து சுத்தமாக ஒதுங்கியிருந்தார். இடையில் சில டிவி தொடர்களைத் தயாரித்தார். ஆனால் அதுவும் நின்று போய், எங்கிருக்கிறார் மோகன் என்று கேட்கும் அளவுக்கு படு அமைதியாக இருந்து வந்தார்.

தானே ஹீரோவாக நடிக்க சில படங்களுக்கு பூஜையும் போட்டார். நடிகைகளையும் புக் செய்து டிஸ்கஷன் நடத்தினார். ஆனால், எதுவும் படமாகவில்லை.

இந்த நிலையில், மீண்டும் நடிக்க வந்துள்ளார் மோகன். சுட்ட பழம் என்ற படத்தில் மோகன் ஹீரோவாக நடிக்கிறார். அவருக்கு ஜோடியாக சுபா புஞ்சா நடிக்கிறார்.

மச்சி படத்தின் மூலம் நடிக்க வந்தவர் சுபா புஞ்சா. ஆனால் இவரது மார்க்கெட் பிச்சிக்கிட்டுப் போனதால், சுத்தமாக படம் இல்லாமல் இருந்து வந்தார்.

இந்த நிலையில்தான் மோகன் ஜோடியாக சுட்ட பழம் படத்தில் நடிக்கும் வாய்ப்பு வந்தது. கிளாமருடன் கூடிய வேடமாம் இது. படத்தில் வரும் ஒரு காட்சியை விளக்கினால் சுபா புஞ்சாவின் கேரக்டரை விளங்கிக் கொள்ள முடியும்.

கதைப்படி ரிசார்ட் ஒன்றின் உரிமையாளராக வருகிறார் மோகன். கிழக்குக் கடற்கரைச் சாலையில் உள்ள ரிசார்ட் அது. அங்கு அடிக்கடி கொலை நடக்கிறது. யார் கொலையாளி என்று தெரியாமல் குழம்புகிறது போலீஸ்.

இந்த வழக்கை விசாரிக்க வருகிறார் சுபா புஞ்சா. நேரடியாக விசாரணையை ஆரம்பிக்காமல், வேறு மார்க்கத்தில் போகிறார். அதாவது மோகனை மடக்கி நமது வலையில் வீழ்த்தி அவரிடமிருந்து மேட்டரைக் கறக்கலாம் என்பதுசுபாவின் திட்டம்.

அதன்படி கவர்ச்சி காட்டி, கட்டிப்புடி ஆட்டம் போட்டு தனது வலையில் வீழ்த்த முயற்சிக்கிறார். ஆனால் மோகனோ, டெல்லியில் உள்ள துருப்பிடிக்காத இரும்பு போல படு உறுதியாக இருக்கிறார்.

இதனால் சுபாவின் முயற்சி தோல்வியைத் தழுவிகிறது. இருந்தாலும் விடாமல் மோகனை விரட்டி விரட்டி காதலிப்பது போல நடித்து கொலையாளி யார் என்பதை அறிய முயற்சிக்கிறாராம்.

மைக் மோகனைப் போலவே சுபா புஞ்சாவும் கன்னடத்துக்காரர் தான். இருவரும் பெங்களூர்வாசிகள் என்பது குறிப்பிடத்தக்கது.

கிளாமர், காமெடி, சஸ்பென்ஸ் என எல்லாம் கலந்த கலவையாம் இந்த சுட்ட பழம்.

சுட்ட பழமோ, சுடாத பழமோ, அழுகாத பழமாக கொடுத்தால் சரி.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil