»   »  'மகாமகள்' சுஜா

'மகாமகள்' சுஜா

Subscribe to Oneindia Tamil


மகாமகம் என்றவுடன் இனி கும்பகோணம் மட்டும் ஞாபகத்திற்கு வராது. கூடவே, இனி 'சூப்பர்' சுஜாவின் நினைவும் வந்து போகும். 'மகாமகம்' படத்தில் அப்படி ஒரு அசத்தல் ஆட்டத்தைப் போட்டுள்ளாராம் சுஜா.

Click here for more images

சூப்பர் ஹீரோ வரிசையில் சேர்ந்து விட்ட சுந்தர்.சி, வீராப்பு வெற்றி பெற்ற கையோடு மகாமகத்தில் படு தீவிரமாக நடித்துக் கொண்டிருக்கிறார்.

இயக்குநர் ஷக்தி சிதம்பரம்தான் இப்படத்தைத் தயாரிக்கிறார். படத்தையும் அவரே இயக்குகிறார். முதலில் பொறுக்கி என்று இப்படத்துக்குப் பெயரிட்டிருந்தனர். தமிழ்க் கலாச்சாரத்திற்கு ஒவ்வாத படத் தலைப்புகளை மாற்றுமாறு தமிழ்த் திரைப்பட கவுன்சில் கோரியதால், அதற்கேற்ப தற்போது 'மகாமகம்' என்று மாற்றி விட்டனர்.

படத்தின் கதை கும்பகோணத்தில் நடப்பதாக இருப்பதால், கும்பகோணத்தில் பிரபலமானது மகாமகம் என்பதால் அதையே படத் தலைப்பாக சூட்டி விட்டாராம் ஷக்தி சிதம்பரம்.

படத்தில் சுந்தர்.சிக்கு ஜோடியாக நடிப்பவர் ராகிணி. மலேசிய அழகியான ராகிணி, இப்படத்தில் படு அழகாக தோன்றுகிறாராம்.

ஏற்கனவே அழகியான ராகிணியை மேலும் பொலிவாக காட்டியுள்ளதால் ரசிகர்களின் மனதில், திரிஷா, நமீதா, நயனதாராவுக்குப் போக மீதமுள்ள இடம் நிச்சயம் கிடைக்கும் என்கிறார் படக்குழுவினர்.

படத்தில் சூப்பர் விஷயம் இருக்கிறது. அதுதான் சுஜா. படு மதமதப்பாக இருக்கும் சுஜா, குத்துப் பாட்டுக்கு சுந்தர்.சியுடன் கும்மாட்டம் போட்டிருக்கிறாராம்.

குத்துப் பாட்டுக்கேற்ற சிறப்பான உடல் வாகுடன் இருக்கும் சுஜா, இந்தப் பாட்டில், படு அமர்க்களமாக ஆடியிருக்கிறாராம். படத்துக்கு பக்க பலமாக வந்திருக்கிறதாம் சுஜாவின் சூப்பர் ஆட்டம்.

மகாமகம் வந்த பிறகு, தற்போது 'ஆன்-லைனில்' இருக்கும் பல சுந்தரிகளை சுஜா 'ஆப்-லைனுக்கு' அனுப்பப் போவது நிச்சயம் என்கிறார்கள்.

படங்களைப் பார்த்தால் அப்படித்தான் தோன்றுகிறது!

Read more about: mahamagam, suja, sunder
Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil