»   »  'ஷிப்ட்' ஆகும் சுஜா

'ஷிப்ட்' ஆகும் சுஜா

Subscribe to Oneindia Tamil
Suja
தமிழில் குத்தாட்ட வாய்ப்புகளே தொடர்ந்து வருவதால் தெலுங்கில் கவனத்தைத் திருப்பிய சுஜாவுக்கு ஹீரோயின் வாய்ப்பு கிடைத்துள்ளதால் தெலுங்குக்கு ஷிப்ட் ஆகியுள்ளாராம்.

நாயகியாக நடிக்கு வந்து அது கிடைக்காமல் குத்தாட்ட சுந்தரியாக மாறியவர் சுஜா. தமிழிலும், மலையாளத்திலும் நிறைய குத்துப் பாட்டுக்களுக்கு ஆடியுள்ளார்.

குத்துப் பாட்டுக்கேற்ற உடல் வாகும், பொலிவும் சுஜாவிடம் மண்டிக் கிடந்ததால், அவருக்கு அதே டைப்பிலேயே வாய்ப்புகள் அளித்து வந்தனர் தமிழ் மற்றும் மலையாளப் படத் தயாரிப்பாளர்களும், இயக்குநர்களும். இதனால் இப்படியே கடைசி வரை காலத்தைத் தள்ள வச்சுருவாங்க போலிருக்கே என்று யோசித்த சுஜா, தெலுங்கில் தேட்டையை ஆரம்பித்தார்.

அவரது கடுமையான முயற்சியின் விளைவாக இப்போது ஹீரோயின் வாய்ப்பு தெலுங்கில் கிடைத்துள்ளதாம். தெலுங்கு இளம் நாயகன் சிவாஜிக்கு ஜோடியாக சுஜா நடிக்கவுள்ளார். தேவி பிரசாத் இயக்கத்தில் உருவாகும் இப்படத்தில் தனது முழுத் திறமையையும் கொட்டி தெலுஹ்கு ரசிகர்களை வசீகரிக்கப் போகிறாராம் சுஜா.

இப்படம் வெற்றி பெற்றால், தனக்கு நல்ல வரவேற்பு கிடைத்தால் தொடர்ந்து தெலுங்கில் ஹீரோயினாகவே நடிக்கப் போகிறாராம். இல்லாவிட்டால் தெலுங்கிலும் குத்துப் பாட்டில் குதிக்கும் திட்டம் உள்ளதாம்.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil