இறுதிக்கட்டத்தை நெருங்கும் எதற்கும் துணிந்தவன்... அடுத்து எங்கே தெரியுமா ?
சென்னை : தனது திறமையான நடிப்பால் ரசிகர்களின் மனதை கொள்ளையடித்தவர் சூர்யா. கெளதம் மேனன் இயக்கத்தில் சூர்யா சமீபத்தில் நடித்த நவரசா ஆந்திராலஜி, சூர்யாவின் நடிப்பிற்கு மற்றொரு சபாஷ் போட வைத்துள்ளது.
சூர்யா, வரிசையாக பல படங்களில் நடித்து வருகிறார். கூட்டத்தில் ஒருவன் படத்தை இயக்கிய டிஜே.ஞானவேல் இயக்கும் ஜெய் பீம் படத்தில் வழக்கறிஞர் ரோலில் முதல் முறையாக நடித்து வருகிறார் சூர்யா. சூர்யாவின் 39 வது படமாக தயாராகி வரும் இந்த படம் விரைவில் ஓடிடி.,யில் ரிலீசாக உள்ளது.

தென்காசி ஷுட்டிங்
இதைத் தொடர்ந்து சூர்யாவின் 40 வது படமான எதற்கும் துணிந்தவன் படத்தை பாண்டிராஜ் இயக்கி வருகிறார். இந்த படத்தின் முதல்கட்ட ஷுட்டிங் 51 நாட்கள் காரைக்குடியில் நடைபெற்றது. அதைத் தொடர்ந்து இரண்டாம் கட்ட ஷுட்டிங் தென்காசி, குற்றாலம் பகுதிகளில் நடைபெற்றது.

இறுதிக்கட்டத்தில் எதற்கும் துணிந்தவன்
தென்காசியில் நடைபெற்ற ஷுட்டிங் சமீபத்தில் நிறைவடைந்தது. மீதமுள்ள பகுதிகளும் நேற்றுடன் முடிக்கப்பட்டன. இதையடுத்து சூர்யா சென்னை திரும்பி உள்ளார். அடுத்தக்கட்ட படப்பிடிப்பு விரைவில் துவங்கப்பட உள்ளதாம். காரைக்குடியிலேயே பெரும்பாலான முக்கிய காட்சிகள் படமாக்கப்பட்டு விட்டதால், இந்த படம் இறுதிக்கட்டத்தை எட்டி உள்ளதாம்.

அடுத்த ஷுட்டிங் சென்னையில்
இரண்டாம் கட்ட ஷுட்டிங்கை சென்னை ஈசிஆரில் நடத்த உள்ளதாக தான் முதலில் கூறப்பட்டது. ஆனால் சில காரணங்களால் கடைசி நிமிடத்தில் இது மாற்றப்பட்டு, தென்காசிக்கு ஷுட்டிங் மாற்றப்பட்டது. முதலில் கூறப்பட்ட சென்னை ஈசிஆரில் எடுக்க வேண்டிய காட்சிகள் தான் இறுதிக்கட்ட ஷுட்டிங்காக இருக்கும் என கூறப்படுகிறது.

பாடல்கள் தான் பாக்கி
இன்னும் இரண்டு பாடல்களின் ஷுட்டிங் மட்டும் தான் மீதமுள்ளதாம். இவற்றை சென்னை மற்றும் கோவாவில் படமாக்க திட்டமிட்டுள்ளார்களாம். அதே சமயம் அடுத்த மாதத்திற்குள் படத்தின் ஒட்டுமொத்த ஷுட்டிங்கையும் நடத்தி முடிக்க டைரக்டர் பாண்டிராஜிடம் கேட்கப்பட்டுள்ளதாம். அடுத்தடுத்த படங்களில் சூர்யா நடிக்க ஒப்பந்தமாகி வருவது தான் இதற்கு காரணமாம்.

டிசம்பரில் ரிலீஸ்
எதற்கும் துணிந்தவன் படம் டிசம்பர் மாதம் கிறிஸ்துமஸ் விடுமுறையில் வெளியிடப்படலாம் என கூறப்படுகிறது. இது பொள்ளாச்சி பாலியல் சம்பவத்தை மையமாகக் கொண்டு எடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுவதால் இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பு மேலும் அதிகரித்துள்ளது.

வரிசையாக காத்திருக்கும் படங்கள்
எதற்கும் துணிந்தவன் படத்தை முடித்த உடன் சிறுத்தை சிவா இயக்கும் படத்தில் சூர்யா நடிக்க போகிறாராம். அதோடு பாலா இயக்கும் புதிய படத்திலும் சூர்யா லீட் ரோலில் நடிக்க போகிறாராம். வரிசையாக இவற்றை முடித்த பிறகு, வெற்றிமாறன் இயக்கும் வாடிவாசல் படத்தின் வேலைகளை சூர்யா துவக்க போகிறார். மாதவன் இயக்கி உள்ள ராக்கெட்ரி நம்பி எஃபெக்ட் படத்திலும் முக்கிய ரோலில் சூர்யா நடித்துள்ளார். ஆனால் இது கெஸ்ட் ரோல் என்றே கூறப்படுகிறது.


Click it and Unblock the Notifications











