»   »  24 படத்தில் வித்தியாசமான சூர்யா.. இணையத்தில் வைரலாகிறது புகைப்படங்கள்

24 படத்தில் வித்தியாசமான சூர்யா.. இணையத்தில் வைரலாகிறது புகைப்படங்கள்

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: சூர்யாவின் நடிப்பில் விக்ரம் குமார் இயக்கத்தில் நீண்ட நாட்களாக உருவாகி வரும் 24 படம் ரசிகர்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்புக்கு உள்ளாகியிருக்கிறது.

இந்நிலையில் இந்தப் படத்திலிருந்து சூர்யாவின் வித்தியாசமான சில புகைப்படங்கள் இணையத்தில் பகிரப்பட்டன. 2 விதமான தோற்றத்தில் சூர்யா இந்தப் படத்தில் வருகிறார் என்று இந்தப் படங்களில் இருந்து தெரிகிறது.

வெளிநாட்டவர்களுடன் சூர்யா இடம்பெறும் இந்த புகைப்படங்கள் தற்போது ட்விட்டர், பேஸ்புக் உள்ளிட்ட இணையதளங்களில் வைரலாகிக் கொண்டிருக்கிறது.

ஒரு புகைப்படத்தில் மீசை இல்லாத தோற்றத்திலும் மற்றொரு புகைப்படத்தில் மீசையுடனும் சூர்யா காட்சியளிக்கிறார். இந்தப் படத்தில் சூர்யா 3 விதமான தோற்றங்களில் நடித்து வருகிறார் என்று தகவல்கள் வெளியாகின.

ஆனால் படக்குழு தரப்பிலிருந்து சூர்யாவின் கதாபாத்திரம் பற்றிய தகவல்கள் இன்னும் வெளியாகவில்லை, இந்தத் தகவலை படக்குழுவினர் மிகவும் ரகசியமாக வைத்திருக்கின்றனர்.

24 படத்தின் புகைப்படங்களை இணையதளங்களில் வெளியிட வேண்டாம் என்று படக்குழு சார்பிலிருந்து சூர்யா ரசிகர்களுக்கு கோரிக்கை விடுத்திருக்கின்றனர்.

புகைப்படங்களை வைத்து கதையை கணித்து விடலாம் என்பதால் இந்த முன்னெச்சரிக்கையாம். இன்னும் 3 தினங்களில் மொத்த படப்பிடிப்பும் முடிந்து விடும் என்று தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.

சூர்யா தனது 2டி நிறுவனம் சார்பில் சொந்தமாக தயாரித்து வரும் இப்படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்து வருகிறார். ஆக்க்ஷன் கலந்த திரில்லராக உருவாகி வரும் 24 படத்தின் ரிலீஸ் தேதி இன்னும் அறிவிக்கப்படவில்லை.

Read more about: suriya, சூர்யா
English summary
Suriya's Upcoming action adventure thriller Film 24.Suriya’s recent Look from 24 Now going viral on all Social Networks.
Please Wait while comments are loading...

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil