»   »  அடிச்சு ஓட்டுடா தம்பி: கார்த்தியின் ரேக்ளா பந்தயத்தை மகனுடன் பார்த்து ரசித்த சூர்யா #KadaikuttySinga

அடிச்சு ஓட்டுடா தம்பி: கார்த்தியின் ரேக்ளா பந்தயத்தை மகனுடன் பார்த்து ரசித்த சூர்யா #KadaikuttySinga

Posted By:
Subscribe to Oneindia Tamil
கார்த்தியின் படப்பிடிப்பை மகன் தேவுடன் பார்த்து ரசித்த சூர்யா

சென்னை: கார்த்தியின் கடைக்குட்டி சிங்கம் படப்பிடிப்பை தனது மகன் தேவுடன் சேர்ந்து பார்த்து ரசித்துள்ளார் சூர்யா.

பாண்டிராஜ் இயக்கத்தில் கார்த்தி விவசாயியாக நடித்து வரும் படம் கடைக்குட்டி சிங்கம். அந்த படத்தில் சயீஷா சைகல், ப்ரியா பவானிசங்கர் என்று இரண்டு ஹீரோயின்கள் உள்ளனர்.

சூரி, சத்யராஜ், பானுப்ரியா உள்ளிட்டோரும் இந்த படத்தில் நடிக்கிறார்கள்.

சூர்யா

சூர்யா

கார்த்தி விவசாயியாக நடிக்கும் இந்த படத்தை அண்ணன் சூர்யா தனது 2டி என்டர்டெயின்மென்ட் நிறுவனம் மூலம் தயாரிக்கிறார். படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து கொண்டிருக்கிறது.

ஷூட்டிங்

ஷூட்டிங்

படத்தில் வரும் ரேக்ளா பந்தய காட்சியை பாண்டிராஜ் படமாக்கினார். அப்போது சூர்யா தனது மகன் தேவுடன் ஷூட்டிங் ஸ்பாட்டிற்கு வந்து படப்பிடிப்பை பார்த்தார்.

மகிழ்ச்சி

ரேக்ளா பந்தயத்தை மகனுடன் சேர்ந்து பார்த்த மகிழ்ச்சியை சூர்யா ட்விட்டரில் வீடியோ மற்றும் புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களுடன் பகிர்ந்துள்ளார்.

பழைய நினைவு

ரேக்ளா பந்தயத்தை மகனுடன் சேர்ந்து பார்த்தபோது தனது சிறுவயது அனுபவங்கள் நினைவுக்கு வருவதாக சூர்யா ட்விட்டரில் தெரிவித்துள்ளார். படத்தை கோடைகால விடுமுறையின்போது ரிலீஸ் செய்ய திட்டமிட்டுள்ளனர்.

கார்த்தி

சூர்யாவின் ட்வீட்டை பார்த்த கார்த்தி ரசிகர்கள் அவர் ரேக்ளா பந்தயத்தில் கலந்து கொண்டபோது எடுத்த புகைப்படத்தை வெளியிட்டுள்ளனர்.

English summary
Suriya has visited Kadaikutty Singam sets with his son Dev. Father, son duo watched Karthi acting in Rekla race scene. Suriya is producing the movie through his 2D entertainment.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil