»   »  சூட்டிங் ஸ்பாட்

சூட்டிங் ஸ்பாட்

Subscribe to Oneindia Tamil
பேரழகன் படத்தில் கூனன் வேடத்துக்காக ரொம்பவும் கஷ்டப்பட்டுள்ளாராம் சூர்யா

அஜீத்தா? விஜய்யா? என்ற போட்டி இருந்தது இரண்டு வருடங்களுக்கு முன்பு. இருவரையும் ஓரங்கட்டி விட்டு விக்ரமும்,சூர்யாவும் முன்னுக்கு வந்து விட்டார்கள். அதிலும் சூர்யாவின் கிடுகிடு வளர்ச்சி சினிமா இண்ட்ஸ்ட்ரீயில் யாரும் எதிர்பாராதது.

நேருக்கு நேர் படத்தில் அறிமுகமாகும் போது, டான்ஸ் ஆடத் தெரியாது; ஒரே மாதிரியான டயலாக் டெலிவரி; பால் வடியும்முகம்; இவர் எங்கே தேறப் போகிறார் என்ற ரீதியில்தான் பேச்சு இருந்தது.

அத்தனை குறைகளையும் துடைக்கும் வகையில் கடுமையான ஹோம் ஒர்க் செய்து, தொடர்ச்சியாக ஹிட் படங்களைக்கொடுத்தார். இப்போது மணிரத்னம், பாரதிராஜா உள்ளிட்ட திரையுலகின் மூத்த கலைஞர்களிடம் பாராட்டு மழையில் நனைந்துகொண்டிருக்கிறார்.

கமல், விக்ரம் வரிசையில் கேரக்டருக்கு தன்னை வருத்திக் கொள்ளும் நடிகராக இப்போது சூர்யாவும் இருக்கிறார். பேரழகன்படத்தில் குத்துச் சண்டை வீரர், கூனன் என இரண்டு மாறுபட்ட கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார். கூனன் வேடம் இயல்பாகஇருக்க வேண்டும் என்பதற்காக ரொம்பவும் மெனக்கெட்டுள்ளாராம் சூர்யா.

5 லட்சம் ரூபாய் மதிப்பில் அமெரிக்காவிலிருந்து மேக்கப் சாதனங்களை வரவவைத்துள்ளார்கள். அவற்றைக் கொண்டு தினசரி 3மணி நேரம் மேக்கப் போடுகிறார்கள். கூன் வேடத்துடன் ஒருக்களித்து நடக்க வேண்டும். இதற்காக ஒரு மாதத்துக்கும் மேலாகபயற்சி எடுத்திருக்கிறார்.

இதோடு தெற்றுப்பல் வேறு. மிகவும் சிரமப்பட்டு நடித்திருக்கிறாராம். படத்தைப் பார்த்துவிட்டு தயாரிப்பாளர் ஏ.வி.எம்.சரவணன், சூர்யாவை கட்டிப் பிடித்துக் கொண்டாராம். அடுத்த மாதம் திரைக்கு வருகிறது இந்தப் படம்.

ஒரு வதந்தி:

சமீபகாலமாக கோடம்பாக்கத்தில் ஒரு வதந்தி. ஜோதிகாவுக்கும் விக்ரமுக்கும் காதல் பற்றிக் கொண்டதாகவும்,சூர்யாவை ஜோதிகா கழற்றிவிட்டுவிட்டதாகவும் சொல்கிறார்கள். அருள் படத்தின் சூட்டிங்கின்போதுகாரைக்குடியில் தங்கியிருக்கும்போது இவர்களுக்குள் காதல் பற்றிக் கொண்டதாக சொல்கிறார்கள்.

ஏற்கனவே திருமணமான விக்ரமோ அல்லது ஜோதிகாவோ இதுவரை இதற்கு மறுப்பு ஏதும் சொல்லவில்லை.

சூர்யா தரப்பிலும் மிக கனத்த அமைதியே நிலவுகிறது. காதல் தோல்வியால் அவர் பெரும் அப்செட் என்றும்சொல்கிறார்கள். இது வெறும் வதந்தியாகவே இருந்தால் நல்லது.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil