»   »  நிலாவுக்கு பாடம் கற்பிக்கும் சூரியன்.. !

நிலாவுக்கு பாடம் கற்பிக்கும் சூரியன்.. !

Posted By:
Subscribe to Oneindia Tamil
கிட்டத்தட்ட தமிழ் வாத்தியாராக மாறியுள்ளார் ஜே.சூர்யா.

படத்துக்கு பி.எஃப் என்று பலான பெயர் வைத்துவிட்டு வருவோர், போவோரிடம் எல்லாம் திட்டு வாங்கிக் கொண்டு சந்தோஷமாய்சூட்டிங் நடத்திக் கொண்டிருக்கிறார் சூர்யா.

ராமதாஸ் வந்தா என்ன, திருமாவளவன் படை திரட்டி வந்தா என்ன நான் எடுக்கும் படம் புளு பிலிம் இல்லை, பெஸ்ட் பிரண்ட்ஸ் பற்றியபடம் என்று பாடம் எடுக்கும் சூர்யா இன்னொரு வேலையிலும் மும்முரமாய் இருக்கிறார்.

பிஎப் படத்துக்காக வட நாட்டு மாடலான மீரா சோப்ராவைக் கொண்டு வந்து அழகாக நிலா என்று பெயர் சூட்டினார். ஆனால்,அடிப்படையில் பஞ்சாபைச் சேர்ந்த நிலாவுக்கு தெரிந்த ஒரே தமிழ் வார்த்தை, தமிழ் மட்டும் தான்.

அவரை வைத்து சிம்ரன் இடத்தை ரீபிளேஸ் செய்யும் முடிவில் இருக்கும் சூர்யாவுக்கு இது பெரிய பிரச்சினையாகியுள்ளது. வாயைஅசைத்தால் பின்னால் டப்பிங்கில் பார்த்துக் கொள்ளலாம். ஆனால், தமிழ் வார்த்தைகளுக்கு வாயசைக்கக் கூட முடியாமல்தடுமாறுகிறாராம் நிலா.

இதனால் சூர்யாவிடம் அவ்வப்போது திட்டும் வாங்கியிருக்கிறார் நிலா. திட்டினாலும் வெட்டினாலும் வாய் வரணுமே, வரவில்லை.

இதனால் சூர்யாவின் கோபம் ஜாஸ்தியாகி நிலாவுக்கு திட்டும் ஓவராகியிருக்கிறது. கையில் பிரம்பு எடுக்காத குறை. ஒரு கட்டத்தில்சூர்யாவைப் பார்த்தாலே நிலா நடுங்க ஆரம்பித்துவிட, இப்படியே போனால் சரியா வராது என்று சூர்யாவே கோதாவில்இறங்கிவிட்டாராம்.

ஒன்னாங் கிளாஸ் தமிழ் பாட நூலை வாங்கி வந்து அ, ஆ, இ, ஈஈஈஈ.. என்று நிலாவுக்குத் தமிழ் கற்றுத் தந்து வருகிறார். கிட்டத்தட்ட தமிழ்வாத்தியார் லெவலுக்கு சூர்யா தன்னை தயார் செய்து கொண்டு பாடம் கற்பித்து வருகிறார்.

நிலாவை உட்கார வைத்து, தமிழறிஞர் நன்னன் ரேஞ்சில், எங்கே, "அ" சொல்லு! "ஆ" சொல்லு, "இ" சொல்லு என்று தமிழ் கற்றுக்கொடுக்கிறாராம்.

படு சூப்பராக நடக்கிறதாம் இந்த தமிழ் ட்யூஷன். அடுத்த நாள் பேச வேண்டிய வசனத்தை முதல் நாள் மாலையே (நோட் திஸ் பாயிண்ட்!,மாலையில்!!) சொல்லிக் கொடுத்து விடுகிறாராம் சூர்யா. அதை "மக்கப்" செய்து வந்து கேமராவுக்கு முன் சரியாக வாயசைக்கவேண்டுமாம்.

தனது சொப்பு இதழை மெல்லத் திறந்து, தமிழ் கற்கும் நிலாவைப் பார்த்து யூனிட்கார்கள் ஜொள்ளோ, ஜொள்ளு வடிக்கிறார்களாம்.

நிலாவுக்கு பாடம் கற்பிக்கும் சூரியன்... !

ஆமா, சூர்யாவுக்கு தமிழ் பற்றில்லை என்று யார் சொன்னது, மிஸ்டர் ராமதாஸ்?

Read more about: actress cinema nila ramya sj surya

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil