»   »  சூட்டிங் ஸ்பாட்

சூட்டிங் ஸ்பாட்

Subscribe to Oneindia Tamil

வழக்கமாக சினிமாவில் சான்ஸ் போனவுடன் டிவிக்குப் போவார்கள். அங்கும் சான்ஸ் போனவுடன் காணாமல் போவார்கள்.

ஆனால், சுவலட்சுமியும் பொன்வண்ணனும் இந்த விதியை மாற்றி இருக்கிறார்கள். பெரிய திரையில் சான்ஸ் குறைந்தவுடன் டிவிபக்கம் போனார் சுவலட்சுமி. அங்கும் சான்ஸ்கள் குறையவே திருமணம் செய்து கொண்டு செட்டில் ஆனார். இந் நிலையில்இப்போது மீண்டும் சினிமாவில் இருந்து அவருக்கு அழைப்பு வந்துள்ளது.

சினிமா இயக்குனராக இருந்து டிவியில் நடிக்கப் போன பொன்வண்ணன் தான் இந்தப் படத்தை எடுக்கப் போகிறார். இதில்,தன்னுடன் டிவியில் நடித்த சுவலட்சுமிக்கு ஹீரோயின் சான்ஸ் கொடுத்துள்ளார் பொன்வண்ணன்.

இந்தப் படத்தின் ஹீரோவாக ராம்ஜி நடிக்கிறார். இவரும் சினிமாவில் டான்சராக இருந்து கொண்டே டிவியிலும் பாப்புலர்ஆனவர் தான்.

படத்தின் பெயர் நதிக் கரையினிலே. இதன் மூலம் டிவியில் இருந்து இந்த மூன்று பேரும் மீண்டும் சினிமா கரைக்குஒதுங்குகின்றனர்.

ஆக்ஷன் கேட்கும் அஜீத்

அஜீத் குழப்பத்தில் இருக்கிறார். இவரது ஆக்ஷன் படங்கள் அவ்வளவாகக் கை கொடுக்கவில்லை. யூகிசேது கதை தந்ததால்வில்லன் படம் தப்பியது. இப்போது அடுத்து என்ன செய்வது என்று தெரியாமல் நிற்கிறார்.

ஷாஜி கைலாஷ் இயக்கத்தில் ஜனா (முன்பு திருடா) படத்தில் நடித்து வருகிறார். இதில் காதலுக்கு அதிக முக்கியத்துவம் தருவதுஎன்று தான் முதலில் முடிவு செய்யப்பட்டிருந்தது. ஆனால், காதலைக் குறைப்போம், ஆக்ஷனை சேர்ப்போம் என்று அஜீத் அடம்பிடிக்க ஏகப்பட்ட அடிதடி காட்சிகள் கதையில் இப்போது செருகப்பட்டுள்ளன.

இதனால் கதையே குழம்பி, டைரக்டரும் குழம்பி, கடைசியில் அஜீத்தும் குழப்பிப் போய் இருப்பதாகத் தகவல்.

விக்ரம் ஆக்ஷன் மூலம் முன்னணிக்கு வந்து கொண்டிருப்பதால் அதைச் சமாளிக்க தனக்கும் ஆக்ஷன் காட்சிகள் அதிகம்வேண்டும் என்கிறாராம். ஷாஜி கைலாசும் ஆக்ஷன் படங்கள் தருவதில் வல்லவர் தான் என்றாலும் அஜீத்தை வைத்து அதைச்செய்ய அவர் விரும்பவில்லை.

என்னவோ பண்ணுங்கப்பா.. படம் ஓடினால் சரி..

Please Wait while comments are loading...