»   »  "பலான டைரக்டரின் படத்தில் சொர்ணமால்யா!

"பலான டைரக்டரின் படத்தில் சொர்ணமால்யா!

Posted By:
Subscribe to Oneindia Tamil

"ஸாரி எனக்கு கல்யாணமாயிடிச்சி படத்தில் பரபரப்பை ஏற்படுத்திய சூட்டோடு சொர்ணமால்யா பலான மலையாள டைரக்டரின்படத்தில் நடிக்கப் போகிறாராம்.

தமிழில் கே.எஸ்.கோபாலகிருஷ்ணன் என்று ஒரு இயக்குநர் அந்தக் காலத்தில் இருந்தார். குடும்பப் படங்களாக எடுத்துத்தள்ளியவர் கே.எஸ்.கோபாலகிருஷ்ணன். கே.ஆர்.விஜயாவை தமிழ் சினிமாவுக்கு அறிகப்படுத்தியவரும் இவரே.

இவருக்கு நேர் மாறான ஒரு இயக்குநர் மலையாளப் படவுலகில் இருந்தார். அவரது பெயரும் கே.எஸ்.கோபாலகிருஷ்ணன்தான்.இவர் எடுத்த படங்கள் அனைத்துமே "பலான படங்கள்தான்.

"பலான படங்கள் எடுப்பதில் படா இயக்குநர் இந்த கே.எஸ்.கோபாலகிருஷ்ணன். நீண்ட காலமாக பட இயக்கத்தில் ஈடுபடாமல்இருந்து வந்த கே.எஸ்.ஜி. (செல்லமா!) இப்போது தமிழில் ஒரு படம் இயக்கப் போகிறாராம்.

இன்னும் பெயரிடப்படாத அந்தப் படத்தில் நடிக்கப் போவது யார் தெயுமா? கொஞ்ச நாளைக்கு முன்பு சங்கர மடத்துடன்இணைத்துப் பேசப்பட்ட சொர்ணமால்யாதான். "ஸாரி, எனக்கு கல்யாணமாயிடிச்சி படத்தில் அவரது அபார "நடிப்பைப்" பற்றிக்கேள்விப்பட்ட கே.எஸ்.ஜி.,

"ஆகா நமக்கு ஏற்ற நடிகை கிடைத்து விட்டார் என சந்தோஷப்பட்டு உடனடியாக சொர்ணாவை வைத்து தனது புதிய தமிழ்ப்படத்தை எடுக்க முடிவு செய்து விட்டாராம். நீண்ட காலமாக ஓய்வில் இருந்த இவர், இந்தப் படத்தின் மூலம் தனது பழையதிறமையை..? காட்ட முடிவு செய்துள்ளாராம்.

"ஸாரியில், சொர்ணாவின் நடிப்பை விட அவரது கவர்ச்சிதான் அதிகம் பேசப்பட்டு வருகிறது. இந்த நிலையில் பலான படதிலகமான கே.எஸ்.ஜி.யின் படத்தில் அவர் புக் ஆகியுள்ளதால், மலையாளப் பட ரேஞ்சுக்கு அது இருக்குமா அல்லது சைவப்படமாக இருக்குமா என்பது தெளிவாகத் தெரியவில்லை.

எப்படியோ, சொர்ணாவின் கவர்ச்சி விருந்தை இன்னும் ஒரு முறை காணும் வாய்ப்பு தமிழ் ரசிகப் பெருமக்களுக்குக் கிடைக்கப்போகிறது! கொடுத்து வெச்சவங்கப்பா !


சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil