»   »  கன்னடத்தில் சொர்ணமால்யா

கன்னடத்தில் சொர்ணமால்யா

Subscribe to Oneindia Tamil
சொர்ணாமால்யா முற்றும் துறந்த மாமுனி நிலைமைக்குச் சென்று கொண்டிருக்கிறார். ஸாரி.. எனக்கு கல்யாணமாயிருச்சு படத்தில் இவரதுசேவையைக் கேட்டும், கண்டும் உணர்ந்த கன்னடத் திரையுலகினர் இவருக்கு வெத்தலை பாக்கு வைத்து வரவேற்பளிக்கஆரம்பித்துள்ளனர்.

காஞ்சி மட விவகாரத்துக்குப் பின் தமிழில் சொர்ணாவை புக் செய்ய இப்போதும் ஒரு தயக்கம் இருந்து கொண்டு தான் இருக்கிறது. ஆனால்,கன்னடத்தில் ஹாட் கேக் ஆகி வருகிறார் சொர்ணமால்யா.

கன்னடத்தில் கியா கியா என்ற படத்தில் சொர்ணமால்யாவின் கலைச் சேவை உச்சத்தை எட்டியிருக்கிறதாம்.

ஈகோ பிடித்த ஒரு கல்லூரிப் பெண்ணுக்கும் ஒரு ஈசி கோயிங் வாலிபருக்கும் இடையே ஏற்படும் காதல் தான் படத்தின் கதை.சொர்ணமால்யாவின் வாழ்க்கையையே கிட்டத்தட்ட பிரதிபலிக்கும் பாத்திரம் என்பதாலோ என்னவோ நன்றாகவே நடித்திருக்கிறாராம்.

(இவருக்கு அமெரிக்காவில் வசித்த பெங்களூரைச் சேர்ந்த அர்ஜூன் என்ற பைனான்சியல் அனலிஸ்ட்டுக்கும் திருமணம் நடந்தது. பின்னர்அவரை தூக்கி எறிந்துவிட்டு சினிமாவுக்கு வந்தார் சொர்ணமால்யா என்பது நினைவுகூறத்தக்கது.)

இந்தப் படத்தில் சொர்ணா தந்த ஒத்துழைப்பு காரணமாக மேலும் சில கன்னடப் படங்களும் தேடி வந்திருக்கின்றன. தமிழ், தெலுங்கில்துணை நடிகைக்குத் தரும் சம்பளத்தைத் தான் கன்னடத்தில் ஹீரோயினுக்குத் தருவார்கள். இருந்தாலும் வந்த வரை லாபம் தானே. இதனால்நிறைய கன்னடப் படங்களில் நடிக்க ஆர்வமாய் இருப்பதாய் பெங்களூர் பத்திரிக்கைகளுக்கு பேட்டி தந்து வருகிறார் சொர்ணமால்யா.

தமிழில் ஸாரி எனக்கு கல்யாணமாயிருச்சு படம் தவிர யுகா என்ற திகில் படத்திலும் புக் ஆகியிருக்கிறார் சொர்ணமால்யா. இந்தப்பாத்திரமே கவர்ச்சிக்காக உருவாக்கப்பட்டது தான், இந்த பாத்திரத்தில் நீங்க முடிஞ்ச அளவுக்கு கவர்ச்சியை நிரப்பனும் என்றப்ரீ-கண்டிசனோடு அட்வான்ஸை தந்திருக்கிறார்கள்.

இந்தப் படத்தை இயக்குவது பக்கா பேய் படமான யார் படத்தை எடுத்த கண்ணன். இதில் ஹீரோயின் வேடத்துக்கு 3 மும்பைமாடல்களைப் பிடித்து வந்துவிட்டார்கள்.

இதற்கிடையே ஸாரி எனக்கு கல்யாணமாயிருச்சு படத்தில் சொர்ணாவும் போட்டிக்கு புளோராவும் காட்டி வேகம் கவர்ச்சிப் புயலை நம்பிஅந்தப் படத்தின் தெலுங்கு டப்பிங் உரிமையை படத்தின் ஹீரோ ஸ்ரீமனே வாங்கிவிட்டாராம்.

தெலுங்கிலும் இந்தப் படம் வெளியானால் சொர்ணமால்யாவுக்கு அங்கும் வாசல் திறக்கும் வாய்ப்புகள் உள்ளன.

சொர்ணமால்யாவுக்கு மட்டுமா புளோராவுக்கும் அந்த மாதிரி ரோல்களுக்கு இனி பஞ்சமிருக்காது போலிருக்கிறது. இவரும் ஸாரி.. எனக்கு படத்தில் புதியகோணத்தில் எல்லாம் கவர்ச்சியைக் காட்டி வருகிறாராம்.

இந்தப் படத்தில் பாண்டுவுக்கு வில்லன் வேடம் தந்திருக்கிறார்கள். பாண்டு என்றவுடன் நினைவுக்கு வருவது அவரது கோணவாய்ச் சிரிப்பும், ஆஆஆங் என்றநீளமான இழுப்பும்தான்.

இந்தப் படத்தில் வில்லனாக வருகிறார் காமெடி நடிகர் பாண்டு. பாண்டுவின் கரங்களில் சிக்கித் தவிக்கும் கூண்டுக் கிளியாக நடிக்கிறார் புளோரா. படத்தில்புளோராவை பாண்டு கற்பழிக்கும் காட்சி வேறாம். இதிலும் சொர்ணமால்யாவுக்கு பொறாமை வரும் அளவுக்கு நடித்தாராம் புளோரா.

இது தவிர சொர்ணமால்யாவுக்கும் பெட்ரூம் காட்சிகள், தம் அடிக்கும் காட்சிகள் என ஏகப்பட்ட கசமுசா காட்சிகள்.

இந்தப் படம் கொஞ்சம் ஓவராகவே போவதைப் பார்த்தால், சென்சாரைத் தாண்டி தியேட்டருக்கு வருமா என்பது கொஞ்சம் சந்தேகமாகத்தான் இருக்குஎன்கின்றன கோடம்பாக்கம் குருவிகள்.

Read more about: actress, cinema, films, ramya, swarnamalya

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil