»   »  சூட்டிங் ஸ்பாட்

சூட்டிங் ஸ்பாட்

Subscribe to Oneindia Tamil

ஸ்வாதி தனது பெயரை நியூமராலஜியின் அடிப்படையில் ஸ்வாதிகா என்று மாற்றி வைத்துக் கொண்டுதயாரிப்பாளர்கள் யாராவது வருகிறார்களா என்று வீட்டு வாசலிலேயே கதியாய் காத்துக் கிடந்தார்.

பலன் ஏதும் பெரிதாக இல்லை. இதையடுத்து வாய்ப்பிழந்த எல்லா நடிகைகளும் செய்யும் ஆல்பம் தயாரிக்கும்வேலையில் இறங்கினார். தன் இளமையை முடிந்த வரை தூக்கிக் காட்டி படங்கள் எடுத்து ஒரு ரவுண்டு விட்டார்.

ஆல்பம் போன இடங்களுக்கு தானும் ஒரு ரவுண்ட் போய் வந்தார். கைமேல் பலன் கிடைத்துவிட்டது.

நடராஜன்பிலிம்ஸ் என்ற புதிய தயாரிப்பாளருக்கு சுவாதியை நடிப்புத் திறமை பிடித்துப் போக தான் தயாரிக்கும் முதல்படமான காதலே ஜெயம் என்ற படத்தில் புக் செய்து படப் பிடிப்பையும் ஆரம்பித்துவிட்டார்.

வேகமாய் சூட்டிங் நடக்கும் இந்தப் படத்தின் ஹீரோ காதல் கொண்டேனில் நடித்த சுதீப். ஸ்வாதிகாவைத் தவிரப்ரீத்தி என்பவரும் நடிக்கிறார். இவர் நீ மட்டும் படத்தில் நடித்து வருகிறார். இவர் தவிர கெளதமிக்கும் ஒருவேடம் உண்டாம்.

படப்பிடிப்பு தமிழகம், கேரளா, ஆந்திரா, கர்நாடகா என தென் மாநிலங்கள் முழுவதிலும் நடக்கவுள்ளனர்.தயாரிப்பாளரான நடராஜனும் நடிக்கப் போகிறாராம்.

காதலால் வாழ்க்கையை இழக்கக் கூடாது என்று சொல்லும் கதையாம். கதை காதல் தொடர்பானது என்பதால்வேலன்டைன்ஸ் டே அன்று வெளியிட திட்டமிட்டிருக்கிறார்களாம்.

இந்தப் படத்தின்மூலம் தமிழில் மீண்டும் ஒரு ரவுண்டு வந்துவிடலாம் என்ற நம்பிக்கையோடு இருக்கிறாராம்ஸ்வாதி ஸாரி ஸ்வாதிகா.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil