»   »  காதல் டூ கல்லூரி!

காதல் டூ கல்லூரி!

Subscribe to Oneindia Tamil

காதல் தந்த பாலாஜி சக்திவேல் அடுத்த படத்துக்கு ரெடியாகி விட்டார். கல்லூரி என்று இதற்குப் பெயர் வைத்துள்ளார்.

இயக்குநர் ஷங்கரின் சிஷ்யர் பாலாஜி சக்திவேல். குருவின் தயாரிப்பில் பாலாஜி இயக்கிய முதல் படம் காதல். தமிழ் சினிமா உலக வரலாற்றில், புதுமுக ஹீேராயினை வைத்து எடுக்கப்பட்ட ஒரு படம் இந்த அளவுக்கு ஓடியதில்லை என்று சொல்லும் அளவுக்கு வசூலிலும், வரவேற்பிலும் பின்னி எடுத்தது காதல்.

டப் ஆகி தெலுங்குக்குப் ேபாய் அங்கும் ரசிகர்கள் கூட்டத்தை வசீகரித்தது. காதலுக்குப் பிறகு பாலாஜியின் சத்தத்தையே காணோம். படம் வெளியாகி கடந்த 2 ஆண்டுளாக பாலாஜி அமைதியாக இருந்து வந்தார். ஆனால் ஆர்ப்பாட்டமான ஒரு கதையை அவர் ரெடி செய்து மெருகேற்றி வந்தார் என்பதுதான் உண்மை.

ஒரு வழியாக தனது 2வது படம் குறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார் பாலாஜி. கல்லூரி என தனது அடுத்த படத்துக்கு பெயர் சூட்டியுள்ளார். புதுப் படம் குறித்து பாலாஜியிடம் கேட்டபோது, காதலுக்குப் பிறகு, அடுத்த படம் என்ன என்று என்னிடம் கேட்காதவர்களே கிடையாது.

ஆனால் அரைகுறையாக, வெந்தும் ேவகாததாக எனது அடுத்த படத்தைக் கொடுக்க நான் விரும்பவில்லை. அதனால்தான் இத்தனை காலதாதமாகி விட்டது. பக்காவாக படத்தைக் கொடுக்க வேண்டும் என்று நினைப்பவன் நான்.

முதலில் பேப்பர் ஒர்க்கை சிறப்பாக செய்ய வேண்டும். அதன் பிறகுதான் களம் இறங்க வேண்டும் என்ற எண்ணம் கொண்டவன் நான்.

ஷங்கர் எனக்கு குரு மட்டுமல்ல, நல்ல நண்பரும் கூட. இரண்டு பேருக்கும் ஒேர மாதிரியான எண்ணங்கள், சிந்தனைகள் உண்டு. காதலுக்குப் பிறகு என்னை 6 தயாரிப்பாளர்கள் அணுகினர். ஆனால் நான் யாரையும் ஏற்றுக் கொள்ளவில்லை. மீண்டும் ஷங்கருடன் இணைந்தே எனது அடுத்த படத்தையும் கொடுக்க வேண்டும் என்பதுதான் அதற்குக் காரணம்.

இப்போது இயக்கப் போகும் கல்லூரியை ஷங்கரின் எஸ் மூவிஸ்தான் இயக்குகிறது என்றார் பாலாஜி.

இப்படமும் மதுரை பக்கத்து பின்னணிதானாம். மதுரையைச் சேர்ந்த ஒரு இளைஞரைத்தான் ஹீேராவாகவும் அறிமுகம் செய்யவுள்ளாராம். ஆனால் ஹீேராயின் மட்டும் மும்ைபக் குட்டி தமன்னா. படம் பிளஸ் பூஜை குறித்த தகவல்கள் விரைவில் ரிலீஸ் ஆகுமாம்.

இது காதல் கல்லூரியா அல்லது மோதல் கல்லூரியா?

Please Wait while comments are loading...

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil