»   »  அனுஷ்கா சர்மா படப்பிடிப்பில் விபத்து: மின்சாரம் தாக்கி ஒருவர் பலி

அனுஷ்கா சர்மா படப்பிடிப்பில் விபத்து: மின்சாரம் தாக்கி ஒருவர் பலி

Posted By:
Subscribe to Oneindia Tamil

கொல்கத்தா: கொல்கத்தாவில் நடந்த அனுஷ்கா சர்மா படத்தின் படப்பிடிப்பில் டெக்னீஷியன் ஒருவர் மின்சாரம் பாய்ந்து பலியாகியுள்ளார்.

பாலிவுட் நடிகை அனுஷ்கா சர்மா பரி என்கிற காதல் கதை படத்தில் நடித்து வருகிறார். புதுமுகம் ப்ரொசித் ராய் இயக்கி வரும் படத்தை அனுஷ்கா தனது கிளீன் ஸ்லேட் பிலிம்ஸ் மூலம் தயாரிக்கிறார்.

Techinician electrocuted in Anushka Sharma's Pari shooting

இது அனுஷ்கா சர்மா தயாரிக்கும் மூன்றாவது படம் ஆகும். படத்திற்கு அனுபம் ராய் இசையமைக்கிறார். அனுஷ்கா சர்மாவுடன் சேர்ந்து க்ரிஅர்ஜ் என்டர்டெய்ன்மென்ட் பரி படத்தை தயாரிக்கிறது.

பரி படத்தின் படப்பிடிப்பு மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவில் நடந்து வருகிறது. நேற்று இரவு படப்பிடிப்பு நடந்தபோது டெக்னீஷியன் ஒருவர் மின்சாரம் பாய்ந்து பலியானார்.

இந்த சம்பவத்தால் படக்குழு அதிர்ச்சி அடைந்துள்ளது. சம்பவம் நடந்தபோது அனுஷ்கா சர்மா, ஹீரோ பரம்ப்ரதா சாட்டர்ஜி ஆகியோர் அங்கிருந்தனர்.

English summary
A technician has got electocuted in Anushka Sharma's Pari shooting in Kolkata on tuesday night.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil