»   »  'தல 57' ஷூட்டிங்கிற்கு சென்று வீடியோவே வெளியிட்ட விவேக் ஓபராய்

'தல 57' ஷூட்டிங்கிற்கு சென்று வீடியோவே வெளியிட்ட விவேக் ஓபராய்

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: தல 57 படப்பிடிப்பில் கலந்து கொள்ள பல்கேரியா சென்ற நடிகர் விவேக் ஓபராய் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

சிறுத்தை சிவா இயக்கத்தில் அஜீத் நடித்து வரும் தல 57 படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு ஐரோப்பிய நாடுகளில் நடந்தது. இந்நிலையில் படக்குழுவினர் பல்கேரியாவுக்கு சென்றுள்ளனர்.

Thala 57 villain releases a video

அஜீத்தின் வில்லனான பாலிவுட் நடிகர் விவேக் ஓபராயும் மும்பையில் இருந்து பல்கேரியாவுக்கு பறந்துள்ளார். கச கசன்னு இருக்கும் மும்பையில் இருந்து பல்கேரியாவுக்கு சென்ற அவரின் கண்கள் கண்ட காட்சியை அவராலேயே நம்ப முடியவில்லை.

உடனே எடு செல்போனை படம்பிடி பல்கேரியாவின் அழகு பனிப்பொழிவை என்று வீடியோ எடுத்துள்ளார். தனது ஹோட்டல் அறையில் இருந்து எடுத்த வீடியோவை அவர் ட்விட்டரில் வெளியிட்டுள்ளார்.

இது குறித்து அவர் ட்விட்டரில் கூறியிருப்பதாவது,

வணக்கம் பல்கேரியா! மும்பை அல்லது சென்னையில் இப்படி பார்க்க முடியாது.. அழகிய பனி அருமையாக உள்ளது! #Thala57 என தெரிவித்துள்ளார்.

English summary
Thala 57 Villain Vivek Oberoi has posted a video of beautiful snow clad Bulgaria on twitter.
Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil