வலிமை படப்பிடிப்பு ஓவர்.. ரஷ்யாவில் இருந்து சென்னைக்கு திரும்பிய படக்குழு.. தீபாவளிக்கு ரிலீஸ்?

சென்னை: தல அஜித்தின் வலிமை படப்பிடிப்பு முழுவதுமாக நிறைவடைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

இரண்டு ஆண்டுகளுக்கு முன் தொடங்கப்பட்ட வலிமை படப்பிடிப்பு சமீபத்தில் ரஷ்யாவில் இறுதிக்கட்ட ஷெட்யூலை முடிக்க புறப்பட்டது.

இந்நிலையில், இறுதிக்கட்ட படப்பிடிப்பு முடிந்து படக்குழு சென்னை திரும்பியுள்ளது.

வலிமை ஷூட்டிங் ஓவர்

வலிமை ஷூட்டிங் ஓவர்

போனி கபூர் தயாரிப்பில் வினோத் இயக்கத்தில் தல அஜித் நடிப்பில் உருவாகி வந்த வலிமை படத்தின் படப்பிடிப்பு முழுமையாக நிறைவடைந்து விட்டது. ரஷ்யாவில் இருந்து சென்னைக்கு படக்குழு திரும்பிய நிலையில், தல ரசிகர்கள் #Valimai ஹாஷ்டேக்கை போட்டு தெறிக்கவிட்டு வருகின்றனர்.

பைக் ஸ்டன்ட்

பைக் ஸ்டன்ட்

தல அஜித் பைக் மற்றும் கார் ரேசர் என்பது அனைவரும் அறிந்த ஒன்று தான். மங்காத்தா படத்தில் தாறுமாறாக பைக் ஓட்டி மெர்சல் காட்டியிருப்பார். இந்நிலையில், அஜித் ரசிகராகவே மாறிய இயக்குநர் வினோத் முழுக்க முழுக்க பைக் ரேஸ் பின்னணியை கொண்ட கதையை உருவாக்கி அதில் இதற்கு முன் அஜித் செய்யாத ஸ்டன்ட்டையும் செய்ய வைத்து படமாக்கி உள்ளார்.

பாலிவுட் ஹீரோயின்

பாலிவுட் ஹீரோயின்

நேர்கொண்ட பார்வை படத்தில் அஜித்துக்கு ஜோடியாக பாலிவுட் நடிகை வித்யா பாலனை களமிறக்கிய இயக்குநர் வினோத் வலிமை படத்தில் பிரபல பாலிவுட் நடிகை ஹூமா குரேஷியை நடிக்க வைத்துள்ளார். சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் காலா படத்தில் காதலியாக வந்து சென்ற ஹூமா குரேஷி இந்த படத்தில் எப்படி கலக்கப் போகிறார் என்பதை பார்க்க ரசிகர்கள் ஆவல்.

Recommended Video

சட்டபேரவையில் ஒலித்த 'வலிமை' டைட்டில்… குஷியில் அஜித் ரசிகர்கள்!
விரைவில் அறிவிப்பு

விரைவில் அறிவிப்பு

ரஷ்ய படப்பிடிப்பை முடித்து விட்டு வலிமை படக்குழு சென்னை திரும்பி உள்ள நிலையில், இன்னும் சில தினங்களில் படத்தின் அதிகாரப்பூர்வ ரிலீஸ் தேதி வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், வலிமை டீசர் விநாயகர் சதுர்த்தி அல்லது ஆயுத பூஜைக்கு வெளியாகும் என்றும் ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.

வேற மாறி வைரல்

வேற மாறி வைரல்

யுவன் சங்கர் ராஜா இசையில் இளமையான தோற்றத்தில் தல அஜித் தோன்றி ஆடிப் பாடி அசத்திய "நாங்க வேற மாறி" பாடலின் லிரிக் வீடியோ 22 மில்லியனை கடந்து வைரலாகி வருகிறது. இயக்குநர் விக்னேஷ் சிவன் வரிகளில் வெளியான இந்த பாடல் தல ரசிகர்களை குத்தாட்டம் போட வைத்துள்ளது.

தல தீபாவளி

தல தீபாவளி

மீண்டும் தமிழ்நாட்டில் தியேட்டர்கள் திறக்கப்பட்டுள்ள நிலையில், வரும் நவம்பர் மாதம் முதல் தான் 100 சதவீத இருக்கைகளுக்கு அனுமதி கிடைக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதனால், தீபாவளிக்கு கண்டிப்பாக தல அஜித்தின் வலிமை ரிலீஸ் ஆகும் என்பது உறுதியாகி உள்ளது. விரைவில் தயாரிப்பாளர் போனி கபூர் ரிலீஸ் தேதியை உறுதி செய்வார்.

வலிமை சிமெண்ட்

வலிமை சிமெண்ட்

இதுமட்டுமின்றி வலிமை எனும் பெயரில் தமிழ்நாடு அரசு புதிதாக சிமெண்ட் ஒன்றை அறிமுகப்படுத்த உள்ளது தெரிந்ததும் தல ரசிகர்கள் அதனையும் வேற லெவலில் டிரெண்ட் செய்தனர். தமிழில் படத்தின் தலைப்பு இருப்பதால் வரிச் சலுகைகளும் இந்த படத்திற்கு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X