»   »  சிம்புவின் 'மச்சான்'!

சிம்புவின் 'மச்சான்'!

Posted By:
Subscribe to Oneindia Tamil


சிம்பு நடிக்கும் கெட்டவன் படத்தில் அவரது மச்சான் வேடத்தில் அதாவது லேகா வாஷிங்டனின் அண்ணன் வேடத்தில் இயக்குநர் தருண் கோபி நடிக்கிறாராம்.

Click here for more images

திமிரு படம் மூலம் திரையுலகில் குமுற வந்த மதுரைக்காரர் தருண்கோபி. முதல் படமே மெகா ஹிட் ஆனதால் அடுத்த படத்தையும் அதிரடியாக கொடுக்க வேண்டிய கட்டாயம் தருண் கோபிக்கு.

அடுத்த படத்தையும் விஷாலுடன் இணைந்தே தர திட்டமிட்டிருந்தார் தருண் கோபி. ஆனால் அவர்களுக்குள் ஏதோ சில காரணங்களால் கருத்து மோதல் ஏற்படவே, விஷாலுடன் இணைவதில்லை என்ற முடிவை எடுத்தார் தருண் கோபி.

இந்த நிலையில்தான் சிம்பு அவரை அணுக, இருவரும் உட்கார்ந்து பேசி, காளை படம் மூலம் இணைந்தனர். படத்தின் முக்கால்வாசிக் காட்சிகளை முடித்து விட்டார் தருண் கோபி. இன்னும் மிச்ச சொச்சம் உள்ள காட்சிகளையும் விரைந்து முடித்து வருகிறார்.

படப்பிடிப்பின்போது தருண் கோபிக்குள் நல்ல நடிகர் ஒளிந்திருப்பதை உணர்ந்த சிம்பு, தான் நடித்து வரும் கெட்டவன் படத்தில் ஒரு வேடம் கொடுத்துள்ளாராம். சும்மா வேடம் இல்லை, தனக்கு மச்சான் வேடம்.

படத்தில் சிம்புவின் ஜோடியாக வருபவர் லேகா வாஷிங்டன். அவருடைய அண்ணன் கேரக்டரில்தான் நடிக்கிறார் தருண் கோபி. ஆனால் நல்ல அண்ணன் இல்லையாம். வில்லங்கமான அண்ணனாம். அதாவது கிட்டத்தட்ட தருண் கோபிதான் படத்தின் வில்லனாம்.

படு வித்தியாசமான வேடத்தை செய்ய முதலில் தருண் கோபி தயங்கினாராம். ஆனால் சிம்புதான், இந்த வேடத்தை மட்டும் செய்யுங்கள், பிறகு பாருங்கள் உங்கள் ரேஞ்ச் எங்கே போகிறது என்று ஆறுதல் கூறி நடிக்க சம்மதிக்க வைத்தாராம்.

நிஜத்திலும் சிம்புவுக்கு வில்லனாகாதவரை சரித்தான்!

Read more about: kettavan simbu

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil