»   »  திருமா. படத்துக்கு புலி சிக்கல்

திருமா. படத்துக்கு புலி சிக்கல்

Subscribe to Oneindia Tamil

திருமாவளவன் போராளி வேடத்தில் நடித்துள்ள அன்புத் தோழி படத்துக்குச் சிக்கல் வந்துள்ளது. விடுதலைப் புலிகள் அமைப்பினரை சித்தரிப்பது போல திருமாவளவன் வேடம் இருப்பதாக கூறி தணிக்கைச் சான்றிதழ் அளிக்க சென்சார் போர்டு மறுத்து விட்டதாம்.

திருமாவளவன் முதல் முறையாக நடிப்பவதாரம் பூண்ட படம் அன்புத்தோழி. நெடுங்காலமாக தயாரிப்பில் இருந்து வந்த இப்படம், பல சிக்கல்களைத் தாண்டி சமீபத்தில்தான் முடிந்தது.

ப்ரீத்தி வர்மா இப்படத்தில் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார். திருமாவளவன் புரட்சிப் போராளி வேடத்தில் கலக்கலாக நடித்துள்ளார்.படம் முடிவடைந்து தணிக்கை சான்றிதழுக்காக தணிக்கை வாரியத்திற்கு அனுப்பப்பட்டது.

படத்தைப் பார்த்த தணிக்கைக் குழுவினர், திருமாவளவனின் வேடம் விடுதலைப் புலிகள் இயக்கத்தினரை நினைவுபடுத்துவது போல உள்ளது. விடுதலைப் புலிகளை மையமாக வைத்து இப்படம் எடுக்கப்பட்டுள்ளது, இது தேச ஒற்றுமைக்கு எதிரானது என்று கூறி சான்றிதழ் தர மறுத்து விட்டனராம்.

இந்தக் காட்சிகளை வெட்டினால்தான் சான்றிதழ் தர முடியும் என்று கூறி விட்டனராம். ஆனால் திருமா. சம்பந்தப்பட்ட காட்சிகளை வெட்ட முடியாது என்று படக்குழுவினர் கூறியுள்ளனர். இதனால் படத்துக்கு சான்றிதழ் கிடைக்கவில்லை.

இதையடுத்து மேல் முறையீட்டுக் குழுவுக்கு அன்புத்தோழி படத்தை அனுப்பி வைத்துள்ளதாம் தயாரிப்புத் தரப்பு.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil