»   »  சூட்டிங் ஸ்பாட்

சூட்டிங் ஸ்பாட்

Subscribe to Oneindia Tamil

டைரக்டர் டி.ஆர். தன் தலையை சிலுப்பிக் கொண்டு இறங்கிவிட்டார். அடுத்த படத் தயாரிப்பில் மிகத் தீவிரமாக இருக்கிறார்.

தன்னுடைய பத்து ஏக்கர் நிலத்தில் ஒரு குட்டி நகரையே உருவாக்கியிருக்கிறார். அந்த நகருக்கு அவரது அம்மா ராஜலட்சுமின் பெயரையே வைத்திருக்கிறார்.டி.ஆருடைய சொன்னால்தான் காதலா படத்தின் படப்பிடிப்பு இந்த குட்டி நகரில் தான் நடந்து கொண்டிருக்கிறது.

தமிழ் சினிமாவில் உள்ள எல்லா நடிகர் நடிகைகளுமே நடிக்கிறார்கள் என்று சொல்லலாம். அந்த அளவிற்கு நட்சத்திரக்கூட்டம். முரளி, லிவிங்ஸ்டன்,மணிவண்ணன், நம்பியார், வி.கே.ஆர், ராஜீவ், சார்லி, வடிவேலு, வையாபுரி, தாமு, ஒருவிரல் கிருஷ்ணாராவ், மாஸ்டர் குறளரசன், வெ.ஆ.மூர்த்தி (பர்ர்ர்ர்ர்),இடிச்சபுளி செல்வராஜ் என அந் நாள் இந்நாள் ஹீரோ, வில்லன், குணசித்திர நடிகர்கள் இதில நடிக்கிறார்கள்.

குஷ்பூ, ரோஜா, கோவை சரளா, வடிவுக்கரசி, மும்தாஜ், பாபி (அறிமுகம்), ஒய்.விஜயா என்று நடிகைகளின் லிஸ்டும் சும்மா இல்லை. நிறைந்து வழிகிறது.(டைடில் மட்டும் 3 ரீல் ஓடுமா சார்).

படத்தில் ஹைலைட்டான ஒரு விஷயத்தைச் சொன்னார் டைரக்டர் டி.ராஜேந்தர். குஷ்பூ ஒரு முஸ்லீம் விதவை, அவரது கணவர் பிரகாஷ். குஷ்பூ, மும்தாஜ் என்கிறகதாபாத்திரத்தில் நடிக்கிறார்.

தன்னுடைய காதலன் பால் அவர் கொண்ட ஒரு அழமான காதல் தான் படத்தின் மையம். பிரமாதமாக நடித்துள்ளார் என்றார்.

இத்தனை காமடியன்கள் நடிக்கிறார்களே ஏதாவது ஒரு காமெடி காட்சியைச் சொல்லுங்களேன் என்றோம். சினிமா உலகம் காப்பி அடிக்கின்ற உலகமாகமாறிக் கொண்டிருக்கிறது. நாளையோ அடுத்த நாளோ சின்னத்திரையில் அதைப் பார்த்துவிடலாம். தயவு செய்து பொறுத்துக்கொள்ளுங்கள் என்றார்.

இருபது ஆண்டுகளாக தன்னுடைய படங்களை டி.விகளுக்கு கொடுக்காமல் இருந்தார் ராஜேந்தர். சமீபத்தில் ஒரு நாள் தன் மகன் சிலம்பு அவரிடம், நீங்க வேறுதயாரிப்பாளருக்கு இயக்கிக்கொடுத்த வசந்த கீதம் படம் டி.விகளில் வருகிறது. நீங்கள் ஏன் உங்களுடைய படங்களை கொடுக்கக்கூடாது என்றுசொன்னதால், டி.விகளுக்கு படங்களை கொடுத்துவிட்டாராம்.

அப்பா நீங்க சொல்றது புரியுது. ஆனா உங்க படங்களை அடுத்த ஜெனரேஷன் பார்க்கவேண்டாமா? என்று சிலம்பரசன் கேட்டவுடனேதான் டி.விக்கு படங்களைகொடுக்கலாம் என்று முடிவெடுத்தேன் என்கிறார் டி.ராஜேந்தர்.

Read more about: cinema, kolliwood, kushboo, mumtaj, tr
Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil