»   »  சூட்டிங் ஸ்பாட்

சூட்டிங் ஸ்பாட்

Posted By:
Subscribe to Oneindia Tamil

அஜீத்தின் ஜி படத்தில் புக் செய்யப்பட்டிருந்த அமோகாவைத் தூக்கிவிட்டார்களாம்.

சமீபத்தில் பாக்ஸ் ஆபிசில் படு பிளாப் ஆன ஆஞ்சநேயாவைத் தொடர்ந்து அஜீத் நடித்து வரும் படம் ஜி.

மம்மூட்டி, ஸ்னேகாவை வைத்து ஆனந்தம் ஹிட் படத்தைத் தந்த லிங்குசாமி இயக்கும் படம் இது.

இந்தப் படத்தின் சூட்டிங் கோவை பகுதியில் படு வேகமாக நடந்தது.

ஆனால், திடுதிப்பென்று மூட்டை முடிச்சைகட்டிக் கொண்டு கார் ரேஸ் பயிற்சிக்காக லண்டன் போய்விட்டார் அஜீத்.

இந் நிலையில் படத்தில் ஹீரோயினாக புக் செய்யப்பட்டிருந்த அமோகாவைக் கழற்றிவிட்டுவிட்டார்கள்.அவருக்குப் பதிலாக திரிஷாவைப் போட்டுள்ளார்கள்.

முன்பு இந்த ரோலுக்கு கர்நாடகத்தைச் சேர்ந்த குட்டி ராதிகாவைத் தான் புக் செய்தார்கள்.

அவர் இயற்கை படத்தில்மிகவும் பிஸியாகிவிட்டதால் அவரைத் தூக்கினார்கள்.

அவருக்குப் பதிலாக அமோகாவைப் போட்டார்கள்.

ஆனால், சமீபத்தில் வெளியான ஜே.ஜே படத்தில் அமோகாவின் நடிப்புத் திறமையைப் பார்த்து லிங்குசாமிமிரண்டுவிட்டதாகத் தெரிகிறது.

இந்தப் படத்தில் ஜவுளிக் கடை ஷோ கேஸ் பொம்மை மாதிரி எந்த பாவனையும்காட்டத் தெரியாமல் திணறியிருக்கிறார் அமோகா.

இதையடுத்து அவர் வேண்டாம் என்று முடிவு செய்யப்பட்டதாம். இப்போது திரிஷாவுக்கு அட்வான்ஸ்தரப்பட்டுள்ளது. அவரோ பயங்கர பிஸி.

விக்ரமுடன் சாமி, ஷாமுடன் லேசா.. லேசா.., சிம்புவுடன் அலையைமுடித்த கையோடு உனக்கு 20, எனக்கு 18ல் பிஸியானார்.

அதை முடித்தவுடன் விஜய்யுடன் கில்லி படத்தில்நடித்து வருகிறார்.

கில்லிக்கு இடையிடையே அஜீத்துடன் ஜியில் நடிக்கப் போகிறார். இன்றைய இளம் நடிகர்கள் வட்டாரத்தில் படுகிராக்கியில் இருக்கும் சில நடிகைகளில் திரிஷா தான் முன்னணியில் இருக்கிறார்.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil