»   »  சூட்டிங் ஸ்பாட்

சூட்டிங் ஸ்பாட்

Posted By:
Subscribe to Oneindia Tamil

திரிஷா நடித்துள்ள முதல் படமான லேசா, லேசா பெட்டிக்குள் தூங்குகிறதாம். வாங்குவதற்கு ஒருத்தரும் முன் வராததால்திரிஷா ரொம்ப விசனமாக உள்ளாராம்.

ஷாம்-திரிஷா இணைந்து நடித்த இந்தப் படம் முழுமையாக ரெடியாகி விட்டது. வினியோகஸ்தர்களிடம் படத்தைப்போட்டுக் காட்டியபோது, என்னங்க இது, இவ்வளவு லேசான கதையை வைத்து படத்தை எடுத்துள்ளீர்கள். இதைநம்பி எப்படிங்க வாங்குறது என்று துண்டை உதறி தோளில் போட்டுக்கொண்டு போய் விட்டார்களாம்.

அதிர்ச்சியடைந்த தயாரிப்பாளர் வட்டாரம் என்ன செய்வது என்று தெரியாமல் விழி பிதுங்கிக் கொண்டுள்ளதாம்.முதல் படம் வருமா, வராதா என்ற வருத்தத்தில் திரிஷா இருக்கிறாார்.

டோன்ட் ஒர்ரி திரிஷா, சினேகாவுக்குக் கூடத்தான் முதல் படம் வரவில்லை. ஆனால் அவர் ரவுண்டு கட்டிஆடவில்லையா என்று திரிஷாவின் நண்பர்கள் ஆறுதல் படுத்திக் கொண்டுள்ளார்களாம்.

இதற்கிடையே மனசெல்லாம் படத்தில் நடித்து வந்த புதுமுக நடிரைக வித்யா பாலன் என்பவர் தூக்கப்பட்டுஅவருக்குப் பதிலாக திரிஷாவைப் போட்டுள்ளார்கள்.

ஆஸ்கர் பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கும் மனசெல்லாம் படத்தில் ஸ்ரீகாந்த் நாயகனாக நடிக்கிறார். அவருடன் நடிக்கமலையாளத்து வித்யாபாலன் புக் செய்யப்பட்டிருந்தார். ஷூட்டிங்கும் தொடங்கியது.

ஆனால் சுட்டுப்போட்டால் கூட நடிப்பு வராததால் வித்யாவை வேறு வழியில்லாமல் தூக்கிவிட்டார்கள்.

இந்த சங்கதி அறிந்ததும் ஆஸ்கர் பிலிம்ஸை தொடர்பு கொண்ட திரிஷா, தான் நடிக்கத் தயாராக இருப்பதாககூறவே அவரையே புக் செய்து விட்டனர்.

இப்போது சூட்டிங்"திருப்திகரமாக" நடந்து வருவதாகக் கேள்வி.

திரிஷாவைவிட அவரது அம்மா மிக அழகாக இருக்கிறாராம். சூட்டிங் ஸ்பாட்டில் இருவரும் வந்தால் இவரது அம்மாவைப் பார்த்துவாயைப் பிளக்காத ஆளே இல்லையாம்.

ஆனால், முதல் படமே இன்னும் வெளிவராத நிலையில் திரிஷாவின் அலட்டல்கள் ரொம்பவே ஓவராகஇருப்பதாக கோலிவுட்டில் காதில் கடிக்கிறார்கள். பார்த்தும்மா...

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil