twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    நடிகைகளுக்கு உமாவின் அட்வைஸ்!

    By Staff
    |
    நடிகர்கள் அத்துமீறி நடந்தால் அதை வெளியே சொல்வதை நடிகைகள் தவிர்க்க வேண்டும் என்று கூறுகிறார் "தென்றல்" உமா.

    உமா, குத்துவிளக்கு போல இருக்கிறார் என்று கூறியே ஒரு படம் வர விடாமல் செய்து விட்டார்கள் கோலிவுட்காரர்கள்.

    உமாவும் குத்துவிளக்குக்கேற்ற குடும்பப் பாங்கான படங்களிலேயே தொடர்ந்து நடித்து காலம் தள்ளி வருகிறார். இவரது அம்மாஅந்தக்கால நடிகை சுமித்ரா என்பது நம்மில் பலருக்குத் தெரிந்த விஷயம்.

    சுமித்ராவின் கணவரும், உமாவின் அப்பாவுமான ராஜேந்திர பாபு, கன்னடத்தில் பிரபல டைரக்டர். அதனால் உமாவின் பூர்வீகம்கன்னடம்தான்.

    அப்பாவின் இயக்கத்தில் இப்போது கன்னடத்தில் உப்பிதாதா எம்.பி.பி.எஸ் (வசூல்ராஜாவேதான்!) படத்தில் ஹீரோயினாக நடித்துவருகிறாராம் உமா. தாய்மொழியான கன்னடத்தில் உமா இந்தப் படத்தின் மூலம் அறிமுகமாகிறார்.

    முன்பை விட பொலிவு கூடியுள்ள உமா இப்போது முன் மாதிரியில்லாமல் ரொம்பத் தெளிவாக பேசுகிறார். உமாவிடமிருந்து உதிர்ந்தமுத்துக்கள் ..

    நடிகர்கள் முத்தமிட்டு விட்டார்கள், அத்துமீறி கட்டிப் பிடித்து விட்டார்கள், செய்யக் கூடாத செயல்களில் ஈடுபட்டார்கள் என்று நடிகைகள்புகார் கூறுவது தவறு.

    இதுமாதியான சம்பவங்களை வெளியில் சொல்லக் கூடாது. முடிந்தவரை சம்பந்தப்பட்டவர்களுடன் பேசித் தீர்த்துக் கொள்ள வேண்டும்.சொல்லித்தான் ஆக வேண்டும் என்றால் சரியான நேரத்தில், சரியான இடத்தில் தெரிவிக்க வேண்டும்.

    என்னைப் பொருத்தவரை அதுபோன்ற சம்பவங்கள் இதுவரை நடந்ததில்லை. நடக்கும்படி நான் வைத்துக் கொண்டதில்லை.

    என்னிடம் கிளாமர் காட்டி நடிக்கும்படி எந்த இயக்குநரும் கூறியதில்லை. கிளாமர் எனக்கு ஒத்துவராது. என்னைப் பொருத்தவரை,முகத்திலேயே கிளாமரைக் காட்டி விட முடியும்.

    முகத்திற்கு கீழே காட்ட வேண்டும் என்றால் .. ஸாரி, அதற்குரிய ஆள் நானில்லை.

    அப்பாவின் அறிமுகத்தில்தான் கன்னடத்தில் அறிமுகமாக வேண்டும் என்று காத்திருந்தேன். இப்போது அந்த ஆசை நிறைவேறி விட்டது.

    தமிழில் ஸ்னேகா நடித்த வேடத்தில் நான் கன்னடத்தில் உபேந்திராவுடன் நடிக்கிறேன்.

    ரசிகர்களின் டேஸ்ட் ஒவ்வொரு விதமாக இருக்கிறது. அவரவர்களுக்கு ஏற்ப நடித்து ரசிகர்களின் மனதில் இடம் பிடிக்க வேண்டும்என்பதுதான் எனது ஆசை.

    நடிக்க வந்து 3 வருடங்கள் ஓடி விட்டன. இன்னும் பளிச்சென மக்கள் மனதில் பதியும்படியான கேரக்டரில் நடிக்கவில்லை என்றேநினைக்கிறேன்.

    எனக்கேற்ற ரோல்களை தேர்வு செய்து நடித்து வருவதும் இந்த நிலைக்குக் காரணம் என நினைக்கிறேன். இருந்தாலும் கொள்கையைதளர்த்திக் கொள்ள எனக்கு விருப்பம் இல்லை.

    இப்போது 4 படங்களில் நடித்து வருகிறேன். பிரஷாந்த்தின் தங்கையாக அடைக்கலம் படத்திலும், அகத்தியனின் இயக்கத்தில்வேடந்தாங்கல், எழில் இயக்கத்தில் அமுதே, பிறகு ரைட்டா தப்பா என நான்கு படங்கள் கைவசம் உள்ளன. நான்கு படங்களிலும்விதவிதமான கேரக்டர் எனக்கு.

    நிச்சயம் நானும் தமிழ் ரசிகர்களின் மனதில் நிரந்தர இடம் பிடிப்பேன். அதற்காக எவ்வளவு காலமானாலும் காத்திருக்கத் தயார் என்றார்.

    உமாவுக்கு தன்னம்பிக்கை கொஞ்சம் அதிகம்தான்!

    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X