»   »  திரைத் துளி

திரைத் துளி

Posted By:
Subscribe to Oneindia Tamil


பிரபல காமடி நடிகர் வடிவேலுவும், வில்லன் நடிகர் நம்பிராஜனும் கட்டிப்புரண்டு சண்டை போட்டுள்ளதுதிரையுலகில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

வடிவேலு படங்களில் சின்ன சின்ன ரோல்களில் நடித்து வந்தவர் நம்பிராஜன். ஆரம்பத்தில் காமெடி வேடம்செய்த இவர் பின்னர் வில்லன் ரோலுக்கு மாறினார். வடிவேலுவின் நண்பராகவும் இருந்ததால், நம்பிராஜனுக்குதனது படங்களிலேயே சின்னச் சின்ன ரோல்களை வாங்கிக் கொடுத்தார் வடிவேலு.

இந் நிலையில், வெள்ளிக்கிழமை காலை சென்னையில் பிரஷாந்த், சினேகா நடிக்கும் ஆயுதம் படத்தின் ஷூட்டிங்நடந்து கொண்டிருந்தது. இதில் வடிவேலு நடிக்கும் காட்சிகள் படமாக்கப்படவிருந்தன.

இதற்காக மேக்கப் அறையில் வடிவேலு மேக்கப் போட்டுக் கொண்டிருந்தார். அப்போது நம்பிராஜன் அங்குவந்தார். நேராக வடிவேலு இருந்த அறைக்குச் சென்ற அவர், வடிவேலுவுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். சிறிதுநேரத்தில் இருவரும் ஒருவரை ஒருவர் மாறி, மாறி அறைந்தபடி வெளியே வந்தனர்.

இருவரும் கட்டிப் புரண்டு சண்டை போட்டதால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது. அங்கிருந்தவர்கள்இருவரையும் விலக்கி விட்டனர். பின்னர் நம்பிராஜன் அங்கிருந்து சென்று விட்டார். வடிவேலு சிறிது நேரஓய்வுக்குப் பிறகு படப்பிடிப்பில் கலந்து கொண்டார்.

மோதலுக்குப் பிறகு நம்பிராஜன் போலீஸில் புகார் கொடுத்தார். அதில், நானும் வடிவேலுவும் காமெடிக்காட்சிகளில் நடித்து வந்தபோது நான் எழுதும் காமெடி வசனங்கள், உருவாக்கும் காட்சிகளை வடிவேலுவிடம்கொடுப்பேன். ஒவ்வொரு காட்சிக்கும் அவர் ரூ. 25,000 வழங்குவார்.

ஆனால் இப்போது எனது வசனங்கள், காட்சிகளை அவர் பயன்படுத்திக் கொண்டு விட்டு பணம் தர மறுக்கிறார்.மேலும், எனது வசனங்கள் சிலவற்றை எனக்குத் தெரியாமலேயே அவர் தனது படங்களில் பயன்படுத்தி வருகிறார்.

இதுகுறித்து கேட்கச் சென்றபோது என்னை மிகவும் அவமானப்படுத்தி பேசினார், மிகவும் அநாகரிகமாக அவர்பேசியதால் கோபமடைந்து அவரை அடிக்க நேர்ந்தது என்று கூறியுள்ளார்.

இந்த சம்பவம் குறித்து வடிவேலுவிடம் கேட்டபோது, நம்பிராஜனுக்கு எனது வளர்ச்சி குறித்து பொறாமை ஏற்பட்டுவிட்டது. இருவரும் ஒரே சமயத்தில்தான் நடிக்க வந்தோம். ஆனால் அவரை விட நான் அதிகமாக வளர்ந்துபிரபலமாகி விட்டதால் என் மீது கோபம் கொண்டுள்ளார். இதனால்தான் என்னைத் தாக்கத் துணிந்துள்ளார்என்றார்.

சில மாதங்களுக்கு முன்பு சக காமடி நடிகரான ஜெயமணி என்பவரை வடிவேலு ஆள் வைத்து அடித்ததாகசெய்திகள் வெளியாயின. அதுதவிர சக நடிகர்களுடன் அவர் முரட்டுத்தனமாகவே நடந்து கொள்வதாகவும்அவ்வப்போது செய்திகள் வெளியாவது வழக்கம். தற்போது வடிவேலுவே அடி வாங்கியதாக வெளியாகியுள்ளதகவல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil