»   »  திரைத் துளி

திரைத் துளி

Subscribe to Oneindia Tamil

பிரபல காமெடி நடிகர் வடிவேலுவைத் தாக்க அடியாட்களை அனுப்பி வைத்ததாக மற்றொருகாமெடி நடிகர் ஜெயமணி மீது போலீஸில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

காரைக்குடியில் சில நாட்களுக்கு முன் "ஆசை வச்சேன் உன் மேல" படத்தின் படப்பிடிப்பு நடந்தது.இதில் வடிவேலு, ஜெயமணி, போண்டாமணி ஆகிய காமெடி நடிகர்கள் கலந்து கொண்ட காட்சிகள்படமாக்கப்பட்டன.

படப்பிடிப்பின்போது போண்டாமணியை திடீரென்று ஜெயமணி தாக்கியுள்ளார். இதில் அவர்மயக்கமடைந்தார். பின்னர் படப்பிடிப்பு ரத்து செய்யப்பட்டு அனைவரும் சென்னை திரும்பினர்.

இந்நிலையில் சென்னை-வடபழனியில் உள்ள ஒரு ஸ்டுடியோவில் "வணங்கா முடி" படத்தின்படப்பிடிப்பு நேற்று நடந்தது. இதில் வடிவேலுவும் நடித்தார்.

அப்போது அங்கு வந்த ஜெயமணியைக் கூப்பிட்ட வடிவேலு, "போண்டாமணியை ஏம்ப்பாஅடிச்ச?" என்று விசாரித்துள்ளார். அதற்கு ஜெயமணி சரியாக பதில் சொல்லவில்லை என்றுதெரிகிறது.

இதையடுத்து அவரை வடிவேலு கண்டித்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த ஜெயமணி,வடிவேலுவைத் திட்டியுள்ளார். "உன்னை என்ன செய்கிறேன் பார்" என்றும் கூறிவிட்டுச் சென்றார்.

பின்னர் சிறிது நேரத்தில் "ஜெயமணியை திட்டிய வடிவேலு எங்கே?" என்று கேட்டுக் கொண்டேசிலர் அங்கு வந்தனர். அவர்களது கையில் தடி, உருட்டுக் கட்டை போன்றவை இருந்தன.

இதைப் பார்த்ததும் வடிவேலு அங்கிருந்து நைசாக நழுவி வடபழனி போலீஸ் நிலையத்திற்குச்சென்று புகார் கொடுத்தார். இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்த போலீஸார் ஜெயமணியையும்,அவருடைய அடியாட்களையும் தேடி வருகிறார்கள்.

நகைச்சுவை நடிகர்களிடையே ஏற்பட்டுள்ள இந்த மோதல் காரணமாக கோடம்பாக்கம் சினிமாவட்டாரத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

வடிவேலுவைப் போலவே ஜெயமணியும் மதுரையைச் சேர்ந்தவர்தான் என்பது குறிப்பிடத்தக்கது.அவர் தற்போது சென்னை-வேளச்சேரியில் வசித்து வருகிறார்.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil