அடி தூள்...வேற லெவல் தல...இணையத்தை கலக்கும் வலிமை ஷுட்டிங் ஸ்பாட் ஆக்ஷன் காட்சிகள்

சென்னை : அஜித்தின் 60 வது படமாக உருவாகி வரும் வலிமை படம் கடந்த 2 ஆண்டுகளாக எடுக்கப்பட்டு வருகிறது. 2019 ல் பிங்க் படத்தின் தமிழ் ரீமேக்கான நேர் கொண்ட பார்வை படத்தின் வெற்றியை தொடர்ந்து, ஹச்.வினோத் - போனி கபூர்- அஜித் கூட்டணியில் வலிமை படம் உருவாகி வருகிறது.

இந்த ஆண்டின் அதிகம் எதிர்பார்க்கப்படும் படங்களில் ஒன்றாக இருக்கும் வலிமை, அதிரடி ஆக்ஷன், சண்டை காட்சிகள் நிறைந்த படமாக உருவாக்கப்பட்டு வருகிறது. இந்த படத்தில் அஜித் ஐபிஎஸ் ஆபீசர் ரோலில் நடிக்கிறார். அதிலும் சட்ட விரோத பைக் ரைஸ்களை தடுக்கும் அதிகாரியாக நடிக்கிறார்கள்.

இந்த படத்தின் இறுதிக்கட்ட சண்டைக்காட்சிகள், சமீபத்தில் தான் ரஷ்யாவில் எடுத்து முடிக்கப்பட்டது. ரஷ்யாவில் மிக முக்கிய காட்சிகள் படமாக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. ரஷ்ய கலைஞர்களை வைத்து இந்த காட்சிகள் படமாக்கப்பட்டுள்ளது.

ரிலீஸ் தேதி எப்போ

ரிலீஸ் தேதி எப்போ

படத்தின் ஷுட்டிங் முடிக்கப்பட்டு விட்டதாக கூறப்பட்டாலும், படத்தின் ரிலீஸ் தேதி இதுவரை உறுதி செய்யப்படவில்லை. படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிளாக நாங்க வேற மாரி பாடல் மட்டுமே வெளியிடப்பட்டது. அதற்கு பிறகு எந்த பாடலும் வெளியிடப்படவில்லை.

பிடிஎஸ் ஃபோட்டோஸ்

பிடிஎஸ் ஃபோட்டோஸ்

செகண்ட் சிங்கிள், படத்தின் ரிலீஸ் தேதி போன்றவை எப்போது வரும் என அஜித் ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர். இந்நிலையில் ரஷ்யாவில் எடுக்கப்பட்ட சண்டை காட்சிகளில் திரைக்கு பின்னால் நடந்த காட்சிகளின் ஃபோட்டோக்கள் இணையத்தில் செம வைரலாகி வருகின்றன. இதனை ஏராளமானோர் பகிர்ந்து வருகின்றனர்.

அதிரடி ஆக்ஷன்

அதிரடி ஆக்ஷன்

ஏராளமான வயர்கள், கம்பிகளில் கட்டப்பட்டு பல கிரேன்களின் உதவியுடன் அந்தரத்தில், பைக்கில் பறந்து சண்டையிடும் காட்சிகள் தான் படமாக்கப்பட்டுள்ளது. அதிலும் பைக் ரேஸ் நடக்கும் உயரமான, சறுக்கலானபகுதியில் இந்த காட்சிகள் படமாக்கப்பட்ட ஃபோட்டோக்கள் தான் வைரலாகி வருகின்றன.

வேற லெவல் தல

வேற லெவல் தல

பார்ப்பவர்களை மிரள வைக்கும் வகையிலான இடத்தில் இந்த காட்சிகள் படமாக்கப்பட்டுள்ளது என்பது உறுதியாகி உள்ளது. இதனால் வலிமையில் அஜித்தின் ஆக்ஷன் காட்சிகள் வேற லெவலில் இருக்கும் என நெட்டிசன்கள் கமெண்ட் செய்து வருகின்றனர்.

தீபாவளி ரிலீசா

தீபாவளி ரிலீசா

ஹுமா குரேஷி, யோகிபாபு, கார்த்திகேயா உள்ளிட்டோர் நடித்துள்ள இந்த படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். ஷுட்டிங் முழுவதும் முடிக்கப்பட்டு விட்டதால், வலிமை படத்தை தீபாவளிக்கு ரிலீஸ் செய்ய படக்குழு முயற்சித்து வருவதாக கூறப்படுகிறது. இருந்தாலும் தீபாவளிக்கு ரஜினி நடித்த அண்ணாத்த படமும் ரிலீசானதால், வலிமை படத்தை தீபாவளிக்கு முன்பே ஆயுத பூஜைக்கு ரிலீஸ் செய்யலாமா எனவும் படக்குழு ஆலோசித்து வருகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X