வேற லெவல் தல...இணையத்தை கலக்கும் வலிமை ஷுட்டிங் ஸ்பாட் ஃபோட்டோஸ்

சென்னை : டைரக்டர் ஹச்.வினோத் இயக்கத்தில், போனி கபூர் தயாரிப்பில் அஜித் இரண்டாவதாக நடித்துள்ள படம் வலிமை. நேர்மை கொண்ட பார்வை படத்தின் வெற்றியை தொடர்ந்து மீண்டும் இணைந்துள்ள இந்த கூட்டணி, வலிமை படத்தை மாஸ் ஆக்ஷன் படமாக உருவாக்கி உள்ளது.

கடந்த இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக எடுக்கப்பட்டு வந்த வலிமை படத்தின் ஷுட்டிங் சமீபத்தில் தான் நிறைவடைந்தது. இந்த படத்தின் பெரும்பாலான பகுதிகள் முடிக்கப்பட்ட நிலையில் க்ளைமாக்ஸ் சண்டை காட்சிகள், பைக் ரேஸ் ஆகியவை ஸ்பெனில் எடுக்க திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால் கொரோனா காரணமாக ஸ்பெயினில் ஷுட்டிங் நடத்த அனுமதி கிடைப்பதில் தாமதம் ஏற்பட்டது.

ரஷ்யாவில் க்ளைமாக்ஸ்

ரஷ்யாவில் க்ளைமாக்ஸ்

இந்த படத்திற்கு இசையமைக்கும் வேலைகளை கடந்த ஆண்டு மார்ச் மாதமே யுவன்சங்கர் ராஜா முடித்து விட்டார். அஜித் ரசிகர்களும் தொடர்ந்து வலிமை அப்டேட் கேட்டு வந்தனர். இதனால் ரசிகர்களை நீண்ட நாட்கள் காக்க வேண்டாம் என்பதால் க்ளைமாக்ஸ் காட்சிகள் , ஸ்பெயின் நாட்டிற்கு பதிலாக ரஷ்யாவில் எடுக்கப்பட்டு படப்பிடிப்பு முழுவதும் நிறைவு செய்யப்பட்டது.

பொங்கல் ரிலீஸ்

பொங்கல் ரிலீஸ்

வலிமை படம் இந்த ஆண்டு தீபாவளிக்கு ரிலீஸ் ஆகும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், இந்த படம் அடுத்த ஆண்டு பொங்கலுக்கு ரிலீஸ் செய்யப்படும் என தயாரிப்பாளர் போனி கபூர் அறிவித்துள்ளார். இதனால் வலிமை படத்தின் போஸ்ட் ப்ரொடக்ஷன் வேலைகள் விறுவிறுப்பாக நடந்து வருகிறது.

சாதனை படைத்த வலிமை

சாதனை படைத்த வலிமை

இதுவரை வெளியிடப்பட்ட வலிமை படத்தின் ஃபஸ்ட்லுக், மோஷன் போஸ்டர், ஃபஸ்ட் க்ளிம்ப்ஸ், ஃபஸ்ட் சிங்கிள் என அனைத்தும் ரசிகர்களிடம் மிகப் பெரிய வரவேற்பை பெற்றது. இவற்றை கொண்டாடி, தாறுமாறாக வைரலாக்கினர் அஜித் ரசிகர்கள். ட்விட்டர் டிரெண்டிங்கிலும் புதிய சாதனை படைத்தது வலிமை.

ஷுட்டிங் ஸ்பாட் ஃபோட்டோக்கள்

ஷுட்டிங் ஸ்பாட் ஃபோட்டோக்கள்

சில நாட்களுக்கு முன் வலிமை படத்தின் எக்ஸ்க்ளுசிவ் BTS ஃபோட்டோக்கள் வெளியாகி படத்தின் மீதான எதிர்பார்ப்பை பல மடங்கு அதிகரிக்க செய்தது. இந்நிலையில் தற்போது வலிமை படத்தின் ஷுட்டிங் ஸ்பாட் ஸ்டில்கள் வெளியாகி இணையத்தை கலக்கி வருகின்றன. ரஷ்யாவில் க்ளைமாக்ஸ் காட்சிகள் எடுக்கப்பட்ட போது இந்த ஃபோட்டோக்கள் எடுக்கப்பட்டுள்ளது.

குஷியான ரசிகர்கள்

குஷியான ரசிகர்கள்

டைரக்டர் ஹச்.வினோத், வில்லன் கார்த்திகேயா ஆகியோருடன் பைக் ரேஸ் உடையில் மிக சர்வ சாதாரணமாக நின்ற படி சாப்பிடும் அஜித், ரஷ்ய தொழில்நுட்ப கலைஞர்களுடன் இணைந்து குரூப் ஃபோட்டோ எடுத்துக் கொண்டது தல ரசிகர்களை குஷிப்படுத்தி உள்ளது. அஜித்தின் எளிமையை ரசிகர்கள் கொண்டாடி தீர்த்து வருகிறார்கள்.

ஆர்வத்தை தூண்டிய தகவல்கள்

ஆர்வத்தை தூண்டிய தகவல்கள்

சமீபத்தில் தான் வலிமை படத்தில் அஜித்திற்கு பல வில்லன்கள் இருக்கிறார்கள். இந்த படத்தில் அஜித் முரட்டு சிங்கிளாகவும், அஜித்தின் ஃபிரண்டாக ஹுமா குரேஷி நடித்துள்ளார் என்பது போன்ற தகவல்கள் வெளியாகின. வலிமை படம் பற்றி அடுத்தடுத்து வெளியாகும் தகவல்கள், ரசிகர்களுக்கு படத்தின் மீதான ஆர்வத்தை தூண்டுவதாக இருந்து வருகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X