»   »  புதுமுகம் வாணியின் துணிவு

புதுமுகம் வாணியின் துணிவு

Subscribe to Oneindia Tamil

ராமகிருஷ்ணா படத்தில் அறிமுகமாகும் வாணி கவர்ச்சியில் புகுந்து விளையாடியிருக்கிறார்.

காதல் கோட்டை படத்துக்குப் பிறகு சிவசக்தி பாண்டியனின் தயாரிப்பில் அகத்தியன் இயக்கும் படம்"ராமகிருஷ்ணா. இப்படத்தில் ஜெய் ஆகாஷ் என்பவர் கதாநாயகனாக நடிக்கிறார். கதாநாயகிகளாக ஸ்ரீதேவிகா,வாணி ஆகியோர் அறிமுகமாகின்றனர். நடன இயக்குனர் சிவசங்கர் முக்கிய கதாபாத்திரம் ஒன்றிலும், ஸ்டண்ட்மாஸ்டர் ஜாக்குவார் தங்கம் வில்லன் வேடத்திலும் நடிக்கிறார்கள்.


குடும்பப் பாங்கான வேடத்தில் மட்டுமே நடிப்பேன் என்று கண்டிசனோடு (முதலில் இப்படித் தான் சொல்வார்கள்)கேரளாவிலிருந்து இறங்கிய ஸ்ரீதேவிகாவுக்கு அதற்கேற்றாற்போல் இந்தப் படத்தில் வேடம் கிடைத்துள்ளது.

படத்தின் இன்னொரு அறிமுகமான வாணி அவ்வாறு கண்டிசன் போட்டு தமிழ் ரசிகர்களைத் தண்டிக்கவிரும்பவில்லை. கொடுத்த டிரஸ்ஸைப் போட்டுக் கொண்டு ஹாயாக நடிக்கிறார். அதனால் ஒரு சில படங்களில்இவரைப் பார்ப்பதற்கு வாய்ப்பிருக்கிறது.

நீண்ட இடைவெளிக்குப் பிறகு படம் பண்ணுவதால் அகத்தியன், படத்தின் ஒவ்வொரு விஷயத்திலும் கவனமாகஇருக்கிறார். இயக்குவதோடு படத்தின் கதை,திரைக்தை, வசனம், பாடல்கள் பொறுப்பையும் இவரே ஏற்றுள்ளார்.

இதுவரை நூறு இடங்களுக்கு மேல் படப்பிடிப்பு நடைபெற்றிருக்கிறது. சென்னை, செங்கல்பட்டு, அம்பாசமுத்திரம்,தென்காசி, குற்றாலம், திருநெல்வேலி, கேரளாவில் பல இடங்கள் மற்றும் குலுமணாலி, லண்டன் என்று பறந்துபறந்து படம் பிடித்துக் கொண்டிருக்கிறார்கள்.

தேவா தான் இசை. பாடல்கள் எல்லாம் நன்றாக வந்திருப்பதாக படப்பிடிப்புக் குழுவினர் சொல்கிறார்கள். எங்கேஎடுத்தாரோ?

உறவுகளுக்கு உள்ள மதிப்பையும், பெருமைகளையும் விளக்கும் விதத்தில் கிராமிய மணத்துடன் படத்தைஇயக்கியுள்ளாராம் அகத்தியன். படத்தில் சிலம்புச் சண்டைக் காட்சிகளுக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்துஎடுத்துள்ளாராம்.

படத்தின் ஹீரோ ஜெய் ஆகாஷ் பிரமாதமாக நடித்துள்ளாராம். க்ளைமாக்ஸில் ஜெய்யின் நடிப்பைப் பார்த்துஅகத்தியன் கண்கலங்கி விட்டாராம். படம் பார்ப்பவர்களும் கண்கலங்கப் போவது உறுதி என்கிறார்.

படத்தின் வசூலைப் பார்த்து தயாரிப்பாளர் கண்கலங்காமல் இருந்தால் சரி.

Please Wait while comments are loading...

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil