»   »  சூறையாடிய வர்தா புயலால் சினிமா நிகழ்ச்சிகள் ரத்து #CycloneVardah

சூறையாடிய வர்தா புயலால் சினிமா நிகழ்ச்சிகள் ரத்து #CycloneVardah

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: வர்தா புயலால் திங்கட்கிழமை நடக்கவிருந்த சினிமா நிகழ்ச்சிகள் ரத்து செய்யப்பட்டன.

வங்கக் கடலில் மையம் கொண்ட வர்தா புயல் திங்கட்கிழமை சென்னை அருகே கரையை கடந்தது. நண்பகல் 12 மணியில் இருந்து மாலை வரை புயல் கரையை கடந்தது.

Vardah effect: Cinema functions cancelled

இதனால் சென்னையில் கனமழை பெய்ததுடன், பேய்க்காற்று வீசியது. சென்னை வரலாற்றில் முதல்முறையாக நேற்று மணிக்கு 192 கிலோமீட்டர் வேகத்தில் காற்று வீசியது.

புயலுக்கு 10 பேர் பலியாகியுள்ளனர். புயல் சென்னையை வேட்டையாடியதால் நேற்று நடக்கிவிருந்த சினிமா நிகழ்ச்சிகள் ரத்து செய்யப்பட்டன. விக்ரம் பிரபுவின் வீரசிவாஜி படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு, தாயம் படத்தின் இசை வெளியீட்டு விழா உள்ளிட்ட நிகழ்ச்சிகள் ரத்து செய்யப்பட்டன.

வர்தா புயல் கரையை கடந்து செல்லும்போது சென்னையை சூறையாடிவிட்டது.

English summary
Cinema related functions are cancelled because of Vardah cyclone that damaged Chennai on monday.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil