»   »  அர்ஜுன் ரெட்டி தமிழ் ரீமேக் - ஷூட்டிங் அப்டேட்!

அர்ஜுன் ரெட்டி தமிழ் ரீமேக் - ஷூட்டிங் அப்டேட்!

Posted By:
Subscribe to Oneindia Tamil
தமிழில் வருகிறான் அர்ஜுன் ரெட்டி- வீடியோ

சென்னை : தெலுங்கில் வெளியாகி சூப்பர் ஹிட்டான படம் 'அர்ஜுன் ரெட்டி'. அந்தப் படத்தை தற்போது 'வர்மா' என்ற பெயரில் தமிழில் ரீமேக் செய்கிறார் பாலா.

விக்ரமின் மகன் துருவ், நாயகனாக அறிமுகமாகிறார். சினிமாவில் அறிமுகமாகும் மகன் துருவிற்கு தேவையான பயிற்சிகளைக் கொடுத்து வந்தார் விக்ரம்.

இந்த நிலையில், இன்று முதல் 'வர்மா' படத்தின் படப்பிடிப்பு நேபாளத்தில் தொடங்குகிறது.

அர்ஜுன் ரெட்டி

அர்ஜுன் ரெட்டி

சந்தீப் வங்கா இயக்கத்தில் விஜய் தேவரகொண்டா, ஷாலினி பாண்டே நடிப்பில் தெலுங்கில் வெளிவந்து பெரும் வரவேற்பைப் பெற்ற 'அர்ஜுன் ரெட்டி' திரைப்படம் தமிழில் 'வர்மா' என்ற பெயரில் ரீமேக் ஆகிறது. இந்தப் படத்தை இயக்குநர் பாலா இயக்குகிறார். இ4 என்டர்டெயின்மென்ட் நிறுவனம் இப்படத்தைத் தயாரிக்கிறது.

இன்று முதல் ஷூட்டிங்

இன்று முதல் ஷூட்டிங்

நாச்சியார் படத்தை பாலா இயக்கி வந்தபோதே, இந்தப் படத்தின் அறிவிப்பு வெளியிடப்பட்ட நிலையில், இன்று நேபாளத்தில் இப்படத்தின் ஷூட்டிங் தொடங்குகிறது. விரைவாக ஷூட்டிங்கை முடிக்க திட்டமிடப்பட்டுள்ளதாம்.

பயிற்சி கொடுத்த விக்ரம்

பயிற்சி கொடுத்த விக்ரம்

ஃபிட்னஸ் கலைஞரை நியமித்து மகன் துருவிற்கு தேவையான பயிற்சிகளை கொடுத்து வந்தார் விக்ரம். அதோடு, அவரது கெட்டப்பையும் தாடி வைத்து மாற்றியிருப்பதோடு, கடின உடற்பயிற்சி மூலம் பாடி லாங்வேஜையும் மாற்றிவிட்டார்.

ராஜுமுருகன் வசனம்

ராஜுமுருகன் வசனம்

இப்படத்திற்கு வசனம் எழுதும் பணியை இயக்குநர் ராஜுமுருகன் மேற்கொண்டு வருகிறார். 'குக்கூ' மற்றும் 'ஜோக்கர்' படங்களின் மூலம் அனைவரது கவனத்தையும் ஈர்த்த ராஜுமுருகன் இப்படத்திற்கு வசனம் எழுதுவதால் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

English summary
'Arjun Reddy' is a super hit movie in Telugu. Bala is currently remaking in Tamil by 'Varma'. Vikram's son Dhuruv is the hero. The shooting of the film 'Varma' begins today in Nepal.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil