»   »  வர்ஷினிக்கு விக்கி கொடுத்த கிஸ்!

வர்ஷினிக்கு விக்கி கொடுத்த கிஸ்!

Subscribe to Oneindia Tamil

மலரினும் மெல்லிய படத்தின் ஷூட்டிங்கின்போது ஹீரோயின் வர்ஷினிக்கு, ஹீரோ விக்னேஷ் கொடுத்த திடீர் முத்தத்தால் வர்ஷினி ஆடிப் போனார். ஆனால் இயக்குநர் சொல்லித்தான் விக்னேஷ் இந்த திடீர் முத்தத்தைக் கொடுத்தார் என்பது தெரிய வந்ததால் சமாதானமாகி புன்னகைத்தார்.

வல்லிய வர்ஷினியும், பிரேக் கிடைக்காத விக்னேஷும் இணைந்து நடித்து வரும் படம் மலரினும் மெல்லிய. செல்வராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் இப்படத்தின் படப்பிடிப்பு புதுக்கோட்டை, அறந்தாங்கி, திருச்சி உள்ளிட்ட இடங்களில் நடந்து வருகிறது.

ஒரு பாடலை சுடுவதற்காக குளு குளு கொடைக்கானலுக்கு படக்குழுவினர் சென்றனர். அங்கு எழில் கொஞ்சும் இடங்களில் விக்னேஷும், வர்ஷினியும் ஆடிப் பாடி நடித்தனர்.

வர்ஷினியைப் பற்றி இங்கு ஒரு வரி சொல்லியாக வேண்டும். படு அழகாக, வாளிப்பாக இருக்கும் வர்ஷினி, கிளாமர் காட்சிகளில் நீக்குப் போக்காக நடித்து காட்சிகளுக்கு கூடுதல் அழகூட்டியுள்ளாராம்.

பாடலின்போது வர்ஷினிக்கு கிளுகிளுப்பான முத்தக் காட்சியை வைக்க திட்டமிட்டார் இயக்குநர் செல்வராஜ். என்னதான் வர்ஷினி கிளாமராக நடித்தாலும் கூட, இந்த முத்தக் காட்சிக்கு அவர் ஆட்சேபிக்கலாம் என்ற பயத்தால் விக்னேஷைக் கூப்பிட்டு காதில் ஓதினார்.

இதையடுத்து விக்னேஷும் ஆயத்தமானார். இயக்குநர் லைட், கேமரா, ஆக்ஷன் என்று சொன்னதும் வர்ஷினியை கட்டிப் பிடித்து பச்செக்கன ஒரு முத்தம் வைத்தார் விக்னேஷ். இதைப் பார்த்து ஆடிப் போனார் வர்ஷினி.

படக் குழுவினரும் அதிர்ந்தனர். ஏற்கனவே சில முறை ஹீரோக்கள் கொடுத்த இதுபோன்ற முத்தத்தால் சில பளார்களும், சில உதார்களும் நடந்த அனுபவத்தைக் கேள்விப்பட்டதால், இப்போது என்ன ஆகப் போகிறதோ என்ற பீதி நிலவியது.

ஆனால் செல்வராஜ் மட்டும் பரம சந்தோஷமாக காணப்பட்டார். பேஸ்த் அடித்தது போல காணப்பட்ட வர்ஷினியிடம் போய், நான் சொல்லித்தான் விக்னேஷ் முத்தம் கொடுத்தார். காட்சி தத்ரூபமாக வர வேண்டும் என்பதற்காகத்தான் இந்தத் திடீர் முத்தம் என்று கூறி சமாதானப்படுத்தினார்.

இதையடுத்து வர்ஷினி சமாதானமடைந்து வெட்கப் பூ பூத்தபடி அடுத்த காட்சிக்கு ரெடியானார்.

Please Wait while comments are loading...