»   »  தில் வர்ஷினி!

தில் வர்ஷினி!

Posted By:
Subscribe to Oneindia Tamil

உதட்டோடு உதடு பொருத்தி அழுத்தமாக முத்தம் கொடுப்பது போன்ற காட்சிகள் படத்துக்கு அவசியம் என்றால் அப்படிக் கொடுத்து நடிக்கத் தயங்கவே மாட்டேன் என்கிறார் மலரினும் மெல்லிய படத்தின் நாயகி வர்ஷினி.

காலைத் தோட்டத்தில் பூத்த மல்லிகைப் பூவை பறித்து எடுத்தது போல அப்படி ஒரு அழகு வர்ஷினிக்கு. மலரினும் மெல்லிய படத்தில் விக்னேஷுக்கு ஜோடியாக நடித்துக் கொண்டிருக்கிறார் வர்ஷினி.

ஜில்லென்ற காதல் காட்சிகளுடன் மலரினும் மெல்லிய படப்பிடிப்பு படு வேகமாக வளர்ந்து வருகிறது. வர்ஷினியின் அழகையும், வனப்பையும் வெளிப்படுத்த நிறைய காட்சிகள் வைத்துள்ளார் இயக்குநர் செல்வராஜ்.

சமீபத்தில் இப்படத்துக்காக எடுக்கப்பட்ட முத்தக் காட்சி கோலிவுட்டில் பரபரப்பை ஏற்படுத்தியது. அதாவது வர்ஷினியிடம் முன் கூட்டியே சொல்லாமல் கொள்ளாமல், வர்ஷினியின் உதடுகளில் தனது உதடுகளைப் பொருத்தி ஆழமான ஒரு முத்தம் கொடுத்தார் விக்னேஷ்.

இந்தக் காட்சியால் வர்ஷினி அதிர்ந்தார். ஆனால் காட்சியின் தத்ரூபத்திற்காகத்தான் இப்படி இயக்குநர் சொல்லி, விக்னேஷ் உம்மா கொடுத்தது வர்ஷினிக்குத் தெரிய வந்தது.

அதன் பின்னர் இதனால் என்ன என்று வர்ஷினி சொல்ல, மீண்டும் ஒரு முறை விக்னேஷை விட்டு வர்ஷினிக்கு முத்தம் கொடுக்கச் செய்து காட்சியை படு திருப்தியாக படமாக்கினாராம் செல்வராஜ்.

அடடா, முத்தப் புரட்சியா என்று வர்ஷினியிடம் கேட்டால் அநியாயத்துக்கு வெட்கப் பூக்கிறார்.

உண்மையில் அந்தக் காட்சியின்போது பயந்துதான் போனேன் என்று நடந்ததை விவரித்தார்.

திடீரென விக்னேஷ் எனது உதடுகளில் ஆழமாக முத்தம் கொடுத்ததால் தடுமாறி விட்டேன். 2 நிமிடங்களுக்கு என்னால் என்ன நடந்தது என்பதே தெரியவில்லை. அப்படி ஒரு அதிர்ச்சி.

அதுதான் எனக்குக் கிடைத்த முதல் முத்தம் என்பதால் பயம் அவ்வளவு சீக்கிரம் போகவில்லை. பிறகு இயக்குநர் விளக்கிய பிறகே நிம்மதிப் பெருமூச்சு வந்தது.

இருந்தாலும் இப்படியா சொல்லாமல் கொள்ளாமல் செய்வது என்று கொஞ்சம் கோபமும் வந்தது. ஆனால் இயக்குநர் என்னை ஆசுவாசப்படுத்தி, இந்தக் காட்சி படத்துக்கு ரொம்பவும் முக்கியம் என்பதை விளக்கினார். பிறகே, நான் சமாதானமடைந்தேன். அப்புறம் மறுபடியும் அதே காட்சியை எனது சம்மதத்துடன் மீண்டும் எடுத்தனர் என்றார் வர்ஷினி.

தொடர்ந்து அவரே, முத்தக் காட்சிக்கு நான் எதிரி இல்லை. படத்துக்கும், கதைக்கும் அவசியம் என்றால் அப்படிப்பட்ட காட்சியில் நடிக்க நான் தயாராகவே உள்ளேன். 2வது முறையாக முத்தக் காட்சியை படமாக்கியபோது நன்கு ஒத்துழைத்தேன். இயக்குநருக்கோ பரம திருப்தி.

முத்தக் காட்சியில் தொடர்ந்து நடிப்பேன். இதற்கு நான் தயங்க மாட்டேன் என்றார் வர்ஷினி.

வர்ஷினிக்கு ஏற்பட்ட அதே படபடப்பு, அந்தக் காட்சியைப் பார்க்கப் போகும் ரசிகர்களுக்கும் ஏற்படும், கூடவே கிளுகிளுப்பும்தான் என்பதில் சந்தேகமே இல்லை.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil