»   »  வெஸ்டர்ன் காட்டில் வேல்!

வெஸ்டர்ன் காட்டில் வேல்!

Posted By:
Subscribe to Oneindia Tamil

நெல்லை மாவட்டத்தின் மேற்குத் தொடர்ச்சி மலைச் சாரலில் உள்ள அழகிய கிராமங்களில் சூர்யா, ஆசின் நடிப்பில் உருவாகும் வேல் படத்தின் ஷூட்டிங் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. சூர்யா, ஆசின் சம்பந்தப்பட்ட பாட்டையும் அங்கு படமாக்கியுள்ளார் இயக்குநர் ஹரி.

ராஜகாளியம்மன் மீடியாஸ் தயாரிப்பில், ஹரி இயக்கத்தில், சூர்யா, ஆசின் நடிப்பில் வேல் உருவாகி வருகிறது. கஜினிக்குப் பிறகு சூர்யாவுடன் இப்படத்தில் ஜோடி போட்டுள்ளார் ஆசின்.

இப்படத்தின் படப்பிடிப்பு நெல்லை மாவட்டத்தின் மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதிகளான சிவகிரி, வாசுதேவநல்லூர், அம்பை, குற்றாலம், முக்கூடல் ஆகிய பகுதிகளில் நடந்து வருகிறது.

வாசுதேவநல்லூர் மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதியில் அடர்ந்த கரும்பு தோட்டங்களில் "பரணிமலை உச்சியிலே பாரத்தையெல்லாம் இறக்கி வைச்சிட்டோம்" என்ற கிராமிய பாடல் படமாக்கப்பட்டது.

சூர்யாவும், பிற டான்ஸர்களும் கலந்து இந்தப் பாட்டுக்கு ஆடினர். மேலும் சில பாடல் காட்சிகள் அம்பை தாமிரபரணி நதிக்கரையிலும், குற்றாலம் பகுதியிலும் படமாக்கப்படுகின்றன.

வேல் குறித்து இயக்குநர் ஹரி கூறுகையில் நடிகர் சூர்யாவோடு இரண்டாவது முறையாக இணைந்துள்ளேன். முதல் படமான ஆறு சிறப்பான வெற்றியைப் பெற்றது.

வேல், ஆக் ஷன் கலந்த குடும்பக் கதையாகும். இப்படத்தில் சூர்யா இரு வேடம் ஏற்றுள்ளார். ஒரு வேடத்தில் சாதுவாகவும், மற்றொரு வேடத்தில் வில்லத்தனத்தோடும் நடிக்கிறார் என்றார்.

அருகே இருந்த சூர்யா கூறுகையில், தொடர்ந்து ஆக்ஷன் படங்களில் நடிப்பதாகக் கூறுகின்றனர். நிச்சயமாக இல்லை. எனக்கு அமையும் கேரக்டர் அந்த தோற்றத்தை ஏற்படுத்தி விடுகிறது.

எந்த கேரக்டர் வந்தாலும், நல்ல கதை இருந்தால் நடிப்பேன். உதாரணத்திற்கு "சில்லுன்னு ஒரு காதல்" இந்த படம் குடும்ப கதைதான்.

ஹரியோடு இணைந்து நடிக்கும் "வேல்" படத்தில் எனக்கு இரு வேடங்கள். இப்படம் அனைத்துத் தரப்பு மக்களையும் கவரும் கதையம்சம் கொண்டது. இப்படம் நல்ல வரவேற்பினை பெறும்.

என்னைபோல் பல படத்தில் நடித்து பெயர் வாங்காமல் என் தம்பி கார்த்தி "பருத்தி வீரன்" என்ற ஒரே படத்தின் மூலம் பெயர் வாங்கி விட்டான். அவனின் இந்த வெற்றிக்கு கடின உழைப்புதான் காரணம்.

நல்ல கதை கிடைத்தால் நானும், என் தம்பி கார்த்தியும் இணைந்து நடிப்போம்.

தமிழகம் முழுவதும் ரசிகர் மன்றங்களை மாற்றி அமைத்து நான் தொடங்கியுள்ள "அகரம்" பவுண்டேஷன் மூலம் மாணவ, மாணவிகளுக்கு கல்வி பணி செய்ய முடிவு செய்துள்ளேன் என்றார் சூர்யா.

வேல் படப்பிடிப்பு இயற்கை எழில் கொஞ்சும் தாமிரபரணி நதிக் கரையிலும், மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதிகளிலும் தொடர்ந்து நடந்து வருகிறது.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil