»   »  'பாலி'யில் வெள்ளித்திரை!

'பாலி'யில் வெள்ளித்திரை!

Subscribe to Oneindia Tamil

பிரகாஷ்ராஜ் தயாரிப்பில், கோபிகா நடிக்கும் வெள்ளித்திரை படத்தின் ஷூட்டிங் சுனாமியால் பாதிக்கப்பட்ட இந்தோனேசியாவின் பாலி தீவில் 15 நாட்கள் நடைபெறவுள்ளது.

சுனாமி சுழற்றிப் போட்ட அழகிய தீவு பாலி. இந்தோனேசியாவில் உள்ள பாலி, அழகிய சுற்றுலா கடற்கரை நகரமாகும். இங்கு முதல் முறையாக ஒரு தமிழ்ப் படத்தின் ஷூட்டிங் நடைபெறவுள்ளது.

பிரகாஷ் ராஜ் மற்றும் மோசர் பேயர் நிறுவனம் இணைந்து தயாரிக்கும் இப்படத்தில் பிரகாஷ் ராஜ், கோபிகா, பிருத்விராஜ் ஆகியோர் நடிக்கின்றனர். விஜி இப்படத்தை இயக்குகிறார்.

இப்படத்தின் முதல் கட்ட ஷூட்டிங் சென்னையில் உள்ள ஸ்டுடியோக்களில் நடந்தது. தற்போது அடுத்த கட்ட படப்பிடிப்புக்காக பாலி தீவுக்கு செல்கின்றனர்.

இங்கு 15 நாட்களுக்குப் படப்பிடிப்பு நடக்கிறது. இங்கு நடைபெறும் முதல் தமிழ்ப் படத்தின் ஷூட்டிங் இதுதானாம். இதற்காக 25 பேர் கொண்ட படக் குழுவினர் இன்று இரவு மலேசியா செல்கிறார்கள். அங்கிருந்து பாலிக்குச் செல்லும் திட்டம்.

பாலியின் அழகை அப்படியே வாரி இறைத்துக் கொண்டு வர திட்டமிட்டுள்ளாராம் இயக்குநர் விஜி.

Read more about: vellithirai

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil