»   »  'விதிர்க்க' வைக்கும் விதிஷா!

'விதிர்க்க' வைக்கும் விதிஷா!

Posted By:
Subscribe to Oneindia Tamil
Vidhisha
விதிஷாவின் கவர்ச்சித் திறமையைக் கேள்விப்பட்டு பல இயக்குநர்கள் ஆர்வமாகியுள்ளனராம்.

சின்னப் பையனாக நடிக்க ஆரம்பித்து, பின்னர் நம்மவர் மூலம் தமிழில் வித்தியாசமான வில்லனாக அறிமுகமாகி, அப்படியே கேரக்டர் ரோல்களுக்குத் தாவி, இடையில் பெரிய இடைவெளி விட்டு இப்போது நாயகனாகியிருக்கும் கரண் அடுத்து நடித்து வரும் படம் காத்தவராயன்.

நாயகனாக மாறிய பின்னர் ஒவ்வொரு படத்திலும் ஒரு நாயகியுடன் நடித்து வருகிறார் கரண். காரணம் கேட்டால், படத்துக்குப் படம் வித்தியாசமாக இருக்க வேண்டும், அதனால்தான் படத்துக்குப் படம் புது நாயகிகளுடன் நடிக்கிறேன் என்கிறார் கரண் (இப்படி நாயகிகள் நினைக்க ஆரம்பித்தால் என்னாகும்?)

தீ நகர் படத்துக்குப் பின்னர் கரண் நடித்து வரும் படம் காத்தவராயன். சிபி ராஜ் நிராகரித்த கதை இது. ஆனால் தனக்குப் பொருத்தமான கதை இது என்பதால் வேண்டி விரும்பி இப்படத்தில் நடித்து வருகிறார் கரண்.

இப்படத்தில் அவருக்கு ஜோடி போட்டிருப்பவர் விதிஷா. படம் முழுக்க நடிப்பில் கலக்கியுள்ள விதிஷா, கவர்ச்சியிலும் பின்னி எடுத்திருக்கிறாராம்.

குறிப்பாக ஆற்றில் கரணுடன் குளிப்பது போன்று எடுக்கப்பட்ட காட்சியில் 'தத்ரூபமாக' நடித்து அசத்தி விட்டாராம். கரைபுரண்டோடிய ஆற்று நீரில், விதிஷாவின் கவர்ச்சியும் அலை பரப்பி ஓடியதாம்.

படு கிளாமராக எடுக்கப்பட்டுள்ள இந்த காட்சி குறித்தும், விதிஷாவின் அழகு நடிப்பு குறித்தும் கேள்விப்பட்ட சில இயக்குநர்கள் விதிஷாவை தங்களது படங்களில் நடிக்க வைக்க ஆர்வமாக உள்ளனராம். தூதும் விட்டுள்ளனராம்.

இருந்தாலும் காத்தவராயன் வந்த பிறகே புதிய படங்களை ஒப்புக் கொள்ளப் போவதாக கூறி வருகிறாராம் விதிஷா.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil