»   »  சூட்டிங் ஸ்பாட்

சூட்டிங் ஸ்பாட்

Posted By:
Subscribe to Oneindia Tamil

எஸ்.ஏ.சந்திரசேகரன் இயக்கத்தில் உருவாகி வரும் முத்தமிடலாமா கோலிவுட்டில் பல்வேறு விதமான எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது.

இதுவரை பிரேக்கே கிடைக்காமல் தவித்து வரும் அருண் குமார் இந்தப் படத்தை பெரிதும் நம்பியுள்ளார்.

இதில் அவரது ரோல் வெகுவாக பேசப்படும் என்கிறார்கள். அருண் குமாரும், அதை உணர்ந்து நன்றாக நடித்துள்ளாராம்.

படத்தின் கதையைக் கேட்டு மகிழ்ந்த மியூசிக் டைரக்டர் பரணியும் (பார்வை ஒன்றே போதுமே புகழ்) அற்புதமாக பாடல்களைப் போட்டுக்கொடுத்துள்ளாராம்.

இதுதவிர அப்பா இயக்கும் இந்தப் படத்தில் மகன் விஜய்யும் ஒரு பாடலைப் பாடியுள்ளார். இதை படத்தில் அருண்குமார் பாடுவார் என்கிறார்கள்.

அருண் குமார் தவிர பிரபு தேவாவின் தம்பி நாகேந்திர பிரசாத்தும் (ஒரு படத்தில் கூட இன்னும் இவர் தேறவில்லை. தாய் மொழியான கன்னடத்திலும் சிலபடங்களில் நடித்துள்ளார், அங்கும் இவர் போணியாகவில்லை, இவரும் இந்தப் படத்தை நம்பியுள்ளாராம்) இந்தப் படத்தில் நடித்துள்ளார்.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil