»   »  நெல்லை பின்னணியில் உருவாகும் விஜய் 60!

நெல்லை பின்னணியில் உருவாகும் விஜய் 60!

Posted By:
Subscribe to Oneindia Tamil

தளபதி 60 என தற்காலிகமாகப் பெயரிடப்பட்டுள்ள விஜய்யின் அடுத்த படம் நெல்லைப் பகுதியை கதைக் களமாகக் கொண்டு உருவாக்கப்பட்டு வருகிறது.

பரதன் இயக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் சென்னையில் தொடங்கியது. அறிமுகப் பாடலுடன் வேகமாக நடந்து வரும் படப்பிடிப்பின் முதல் கட்டம் முடிந்துள்ளது.

நெல்லைப் பின்னணி

நெல்லைப் பின்னணி

அடுத்தக்கட்ட படப்பிடிப்பை நெல்லையில் நடத்தப்போகிறார்களாம். இப்படம் முழுக்க முழுக்க திருநெல்வேலியை மையப்படுத்தி உருவாவதால், நெல்லையின் சுற்றுப் புறப் பகுதிகளிலேயே படப்பிடிப்பை நடத்தப்போவதாக படக்குழுவைச் சேர்ந்த ஒருவர் தெரவித்தார்.

நெல்லை செட்

நெல்லை செட்

திருநெல்வேலியை போன்று சென்னையிலேயே செட் போட்டு பெரும்பாலான காட்சிகளை படமாக்கிவிட்டனர். இருப்பினும், ஒருசில காட்சிகளுக்காக நெல்லையில் படப்பிடிப்பு நடத்த முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. விரைவில், இப்படக்குழு நெல்லையில் முகாமிடுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

கீர்த்தி சுரேஷ்

கீர்த்தி சுரேஷ்

இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடிக்கிறார். ரஜினி முருகன் என்ற ஒரு படம் ஹிட்டானதுமே, இவர் விஜய்க்கு ஜோடியாகியிருப்பது குறிப்பிடத்தக்கது.

சந்தோஷ் நாராயணன்

சந்தோஷ் நாராயணன்

‘கத்தி' படத்திற்கு பிறகு காமெடி நடிகர் சதீஷ் இப்படத்தின் மூலம் மீண்டும் விஜய்யுடன் இணைந்துள்ளார். மேலும், ஸ்ரீமன், டேனியல் பாலாஜி உள்ளிட்டோரும் இப்படத்தில் நடிக்கின்றனர். படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைக்கிறார். சுகுமார் ஒளிப்பதிவு செய்கிறார்.

English summary
Vijay's 60th untitled movie's second schedule shooting will be held in Thirunelveli and suburbs.
Please Wait while comments are loading...

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil