»   »  நாளை சென்னையில் துவங்கும் விஜய் 61 படப்பிடிப்பு

நாளை சென்னையில் துவங்கும் விஜய் 61 படப்பிடிப்பு

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: விஜய் 61 படத்தின் படப்பிடிப்பு நாளை சென்னையில் துவங்குவதாக அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

இது குறித்து வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது,

தெறி, பைரவா படங்களை அடுத்து விஜய் கதாநாயகனாக நடிக்கும் பெயரிடப்படாத 61வது படத்தை ஸ்ரீ தேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனம் தங்களது 100வது படமாக தயாரிக்கிறது.

Vijay 61 officially announced

விஜய் நாயகனாக நடிக்கும் இதில் எஸ்.ஜே. சூர்யா, ஜோதிகா, காஜல் அகர்வால், சமந்தா, மூவருடன் வடிவேல், சத்யன் இவர்களுடன் சத்யராஜ் நடிக்கிறார்.

ஏ.ஆர். ரகுமான் இசையையும் ஜி.கே. விஷ்ணு ஒளிப்பதிவையும், ரூபன் படத்தொகுப்பையும், முத்துராஜ் கலையையும், அனல் அரசு சண்டை பயிற்சியையும், விஜயேந்திர பிரசாத் திரைக்கதையையும் கவனிக்கிறார்கள்.

பிப்ரவரி 1ஆம் தேதி சென்னையில் படப்பிடிப்பு துவங்கி வட இந்தியாவில் சில பகுதிகளிலும் அமெரிக்கா-ஐரோப்பா ஆகிய நாடுகளில் உள்ள அழகிய இடங்களிலும் வளர உள்ளது.

மிகப் பிரம்மாண்டமான படமாக உருவாகும் இப்படத்தை ஸ்ரீ தேனாண்டாள் பிலிம்ஸ் உரிமையாளரான என். ராமசாமி தேனாண்டாள் ஸ்டுடியோஸ் லிமிடெட் சார்பில் தயாரிக்கிறார்.

விஜய்யின் தெறி வெற்றிப் படத்தை இயக்கிய அட்லீ கதை, வசனம் எழுதி டைரக்ட் செய்கிறார் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

English summary
Vijay 61 movie to go on floors in Chennai from tomorrow. This movie will be directed by Atlee.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil