»   »  இணையத்தில் லீக் ஆன 'விஜய் 62' சண்டைக்காட்சி... படக்குழு அதிர்ச்சி!

இணையத்தில் லீக் ஆன 'விஜய் 62' சண்டைக்காட்சி... படக்குழு அதிர்ச்சி!

Posted By:
Subscribe to Oneindia Tamil
வைராலிகி வரும் விஜய்62 சண்டை காட்சி வீடியோ

சென்னை : விஜய் தற்போது தனது 62-வது படத்தில் நடித்து வருகிறார். இந்தப் படத்திற்கு இன்னும் டைட்டில் வைக்கப்படவில்லை.

ஏ.ஆர்.முருகதாஸ் இப்படத்தை இயக்குகிறார். ஏ.ஆர்.ரகுமான் 'விஜய் 62' படத்திற்கு இசை அமைக்கிறார். இப்படத்தின் ஷூட்டிங் நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், 'விஜய் 62' படத்தின் சண்டைக்காட்சி வீடியோ, சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

விஜய் 62

விஜய் 62

விஜய்யின் 62-வது படமான இதனை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. விஜய்க்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடிக்கிறார். இப்படத்திற்கு எழுத்தாளர் ஜெயமோகன் வசனம் எழுதுகிறார். இப்படத்தின் ஷூட்டிங் சென்னையில் முடிவுற்று தற்போது மும்பையில் நடைபெற்று வருகிறது.

படப்பிடிப்பு

படப்பிடிப்பு

இந்தப் படத்தின் படப்பிடிப்பு சில நாட்களுக்கு முன்பு சென்னை அருகே முட்டுக்காடு பகுதியில் உள்ள கடற்கரையில் செட் போட்டு நடத்தப்பட்டது. கடைவீதி போன்று போடப்பட்ட செட்டில் இரண்டு வாலிபர்கள் ஒரு பெண்ணின் சங்கிலியை பறித்துக் கொண்டு ஓடுவது போலவும், விஜய், அவர்களை தடுத்து நிறுத்தி பைக் ஓட்டுபவனை அலேக்காக தூக்கி தரையில் அடிப்பது போலவும் காட்சிகள் படமாக்கப்பட்டது.

லீக் ஆன காட்சி

லீக் ஆன காட்சி

இந்த காட்சி படமாக்கப்பட்டபோது சுற்றி படப்பிடிப்பு குழுவினர் நிற்கிறார்கள். படப்பிடிப்பில் செல்போனை பயன்படுத்தக்கூடாது என்ற கடுமையான விதிமுறை இருந்தும் யாரோ பின்னால் நின்று இந்த காட்சியை செல்போனில் படம்பிடித்து இணைய தளத்தில் வெளியிட்டுள்ளனர்.

படக்குழுவினர் அதிர்ச்சி

படக்குழுவினர் அதிர்ச்சி

இணையத்தில் லீக் ஆன இந்தக் காட்சியால் படக்குழுவினர் அதிர்ச்சி அடைந்துள்ளனர். கடந்த சில தினங்களுக்கு முன்பு ரஜினிகாந்த் நடித்திருக்கும் 'காலா' படத்தின் சண்டைக் காட்சிகள் வெளிவந்தது குறிப்பிடத்தக்கது.

ஷூட்டிங் ஸ்பாட் புகைப்படம்

ஷூட்டிங் ஸ்பாட் புகைப்படம்

'விஜய் 62' படத்தின் நியூ லுக் புகைப்படமும் சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி இருக்கிறது. இந்த ஷூட்டிங் ஸ்பாட் புகைப்படத்தில் விஜய் இன்னும் இளமையான தோற்றத்தில் இருக்கிறார். இந்தப் புகைப்படம் ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.

English summary
Vijay is currently acting in his 62nd film. AR Murugadas is directing the film. The shooting of the film is currently taking place in Mumbai. A few days ago, the shooting was done on the coast of Muttukadu area near Chennai. This scene was shot on the cell phone by someone. This video is goes viral on social networks.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil