»   »  'ஜூங்கா' ஷூட்டிங்கில் விஜய் சேதுபதியின் மகன் - வைரலாகும் போட்டோ!

'ஜூங்கா' ஷூட்டிங்கில் விஜய் சேதுபதியின் மகன் - வைரலாகும் போட்டோ!

Posted By:
Subscribe to Oneindia Tamil
'ஜூங்கா' ஷூட்டிங்கில் விஜய் சேதுபதியின் மகன்- வீடியோ

சென்னை : நடிகர் விஜய் சேதுபதிக்கு படங்கள் குவிந்த வண்ணம் இருக்கின்றன. எப்போதும் கைகளில் படங்களுடன் பிஸியாகவே வலம் வருகிறார். கடந்த ஆண்டிலும் அதிக படங்கள் நடித்த முன்னணி நடிகராக விஜய் சேதுபதியே இருப்பார் எனக் கருதப்படுகிறது.

விஜய் சேதுபதி தற்போது பிரான்சில் 'ஜூங்கா' படத்தின் ஷூட்டிங்கில் கலந்துகொண்டு வருகிறார். இந்தப் படத்தில் வித்தியாசமான கெட்டப்பில் நடிக்கிறார் விஜய் சேதுபதி. அவருக்கு ஜோடியாக 'வனமகன்' சாயீஷா நடித்து வருகிறார்.

Vijay sethupathi with his son

மேலும் இந்தப் படத்தின் ஷூட்டிங்கில் விஜய் சேதுபதியின் மகனும் கலந்துகொண்டுள்ளார். விஜய் சேதுபதி போலவே அவரின் மகனும் வித்தியாசமான கெட்டப்பில் இருக்கும் புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது.

ஜூங்கா படத்தை விஜய் சேதுபதியே தயாரித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. விஜய் சேதுபதியின் மகனும் இந்தப் படத்தில் நடித்திருப்பதாக ரசிகர்கள் கூறிவரும் நிலையில், விஜய் சேதுபதி தயாரிக்கும் படம் என்பதால் ஷூட்டிங்கில் கலந்துகொண்டுள்ளார் எனத் தெரிகிறது.

English summary
Vijay Sethupathi is currently working for 'Junga' shooting in France. He is pairing up with 'Vanamagan' Sayisha. Vijay Sethupathi's son also participated in the shooting of this film.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil