»   »  கனடா சென்றார் விஜயகாந்த்

கனடா சென்றார் விஜயகாந்த்

Subscribe to Oneindia Tamil


விஜயகாந்த்தின் அரசாங்கம் படப்பிடிப்பு கனடாவில் நடைபெறுகிறது. இதற்காக படக்குழுவினருடன் விஜயகாந்த் கனடா சென்றுள்ளார்.

விஜயகாந்த் நடிக்கும் 150வது படம் அரசாங்கம். முதலில் வித்தகன் என இதற்கு பெயர் சூட்டியிருந்தனர். விஜயகாந்த்தின் மச்சான் சுதீஷ்தான் இப்படத்தை எடுக்கிறார். மாதேஷ் படத்தை இயக்குகிறார்.

படப்பிடிப்புக்காக படக்குழுவினர் முன்பே கனடா சென்று விட்டனர். ஆனால் கடைசி நேரத்தில் விஜயகாந்த்துக்கு விசா கிடைக்காமல் லேட் ஆகியுள்ளது. கடுப்பான கேப்டன், இங்கேயே வச்சுக்கலாமே என்று கூறினாராம்.

இதனால் முதல் கட்ட ஷூட்டிங் சென்னையிலேயே நடந்தது. தற்போது விஜயகாந்த்துக்கு விசா கிடைத்து விட்டதாம். இதனால் அவரும் தற்போது கனடா சென்றுள்ளார்.

இந்தப்படத்தில் விஜயகாந்த் போலீஸ் பயிற்சி அதிகாரியாக நடிக்கிறாராம். 2வது கட்ட படப்பிடிப்பு நாளை கனடாவில் தொடங்குகிறது.

நச் அழகி நவ்னீத் கவுர், கேப்டனுக்கு ஜோடியாக இதில் நடிக்கிறார். தெலுங்கில் திகட்டத் திகட்ட கவர்ச்சி காட்டிக் கொண்டிருப்பவர்தான் கவுர். இபபோது தமிழ் ரசிகர்களையும் தகதக்க வருகிறார்.

விஜயகாந்த், நவ்னீத் கவுர் உள்ளிட்ட 25 பேர் கொண்ட படக்குழுவினர் நேற்று இரவு கனடா கிளம்பிச் சென்றுள்ளனர்.

20 நாட்கள் தொடர்ந்து இடைவெளி இல்லாமல் ஷூட்டிங் நடக்குமாம். அடுத்த மாதம் படப்பிடிப்பை முடித்துவிட்டு சென்னை திரும்புகிறார்களாம்.

Read more about: canada, navneethkavur, vijaykanth

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil