»   »  விஜயகாந்துக்கு ஜோடியாக மும்பை அழகி

விஜயகாந்துக்கு ஜோடியாக மும்பை அழகி

Subscribe to Oneindia Tamil

கேப்டன் விஜயகாந்த்தின் நெறஞ்சு மனசு படத்தில் இருளாயி என்ற கிராமத்து கேரக்டரில் மும்பையைச் சேர்ந்த அழசி சூசன் நடிக்கிறார்.

கஜேந்திராவை முடித்து விட்ட விஜயகாந்த் அந்தப் படத்தின் எதிர்காலம் பாமகவினர் கையில் உள்ளது என்பதால் அதை விட சூப்பர்ஹிட்கொடுக்க வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளார்.

இதனால் இயக்குநர் சமுத்திரக்கனியைக் கூப்பிட்டு அவரது கதையில் நெறஞ்ச மனசு என்ற படத்தில் விறுவிறுப்பாக நடித்து வருகிறார்.பொள்ளாச்சி, கோபி, மூணாறு என ஷூட்டிங் படு வேகமாக நடந்து வருகிறது.

முதலில் படத்துக்கு நெறஞ்ச மனசுக்காரன் என்றுதான் பெயர் சூட்டப்பட்டது. ஆனால் இந்தத் தலைப்பு, ஏதோ ராமராஜன் படப்பெயர்களைப் போல் இருப்பதாக விஜயகாந்துக்குப் படவே, காரனை வெட்டிவிட்டு நெறஞ்ச மனசு என்று பெயர் வைக்கச் சொல்லிவிட்டார்.

இந்தப் படத்தில் விஜயகாந்த்துக்கு ஜோடியாக ஸ்னேகா நடிப்பார் என்று முதலில் கூறப்பட்டது. ஆனால் இப்போது ஸ்னேகா இல்லை.அதற்குப் பதிலாக ஒன்றுக்கு ரெண்டாக மும்பை அழகிகளை அழைத்து வந்துள்ளனர்.

ஒரு அழகியான சூசன், இருளாயி என்ற கிராமத்து கெட்டப்பில் நடிக்கிறார். இன்னொருவர் மஹிமா. விஜயகாந்த் அய்யனார் என்றகேரக்டரில் நடிக்கிறார். இதற்காக சின்னக் கவுண்டர் ஸ்டைலில் வித்தியாசமான கெட்டப்பில் வருகிறார்.

படத்தை இயக்கும் சமுத்திரக்கனி இயக்குநர் பாலச்சந்திரின் பள்ளியிலிருந்து வந்தவர் என்பதாலும், விஜயகாந்த்தின் தற்போதைய நிலைபரபரப்பானதாக இருப்பதாலும் படத்தின் மீது எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

இந்தப் படம் இப்படி வேகமாக வளர்ந்து கொண்டிருக்க, கேப்டனின் முந்தைய படமான கஜேந்திரா இன்னும் ரிலீஸ் ஆகாமல் இருக்கிறது.படத்தின் தயாரிப்பாளர் வி.ஏ.துரை, பிதாமகன் படத்தில் விக்ரமுக்கு சம்பளத்தை இழுத்தடித்தது போல, விஜயகாந்துக்கும்இழுத்தடித்துள்ளார்.

ஊரில் இருக்கும் நடிகர், நடிகைகளுக்கு எல்லாம் பஞ்சாயத்து பண்ணி வைக்கும் தனக்கே இந்த நிலையா என்ற கோபப்பட்ட விஜயகாந்த்,டப்பிங்குக்கு வராமல் எஸ்கேப் ஆகிவிட்டார். அதன்பின் துரை, பச்சைக் கொடியைக் காட்டியதைத் தொடர்ந்து, படத்தை முடித்துக்கொடுத்திருக்கிறார்.

படம் அடுத்த மாதம் முதல் வாரம் திரைக்கு வருகிறது.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil