»   »  சூட்டிங் ஸ்பாட்

சூட்டிங் ஸ்பாட்

Posted By:
Subscribe to Oneindia Tamil

பாய்ஸ் படத்தின் தோல்வியையடுத்து இயக்குனர் ஷங்கர் எடுத்து வரும் அந்நியன் படப்பிடிப்பு மிகப் பரபரப்பாக நடந்து கொண்டுள்ளது. அருள் படம் நினைத்த அளவுக்குப் போகாததால் இந்தப் படத்தைத் தான் ஹீரோ விக்ரமும் மலையாக நம்பியிருக்கிறார்.

படத்தின் சூட்டிங் ஸ்ரீபெரும்புதூர் பக்கமாக நடந்து கொண்டிருக்கிறது. மாபெரும் செட் அமைத்து ஏரியல் ஷாட் எடுக்க இரண்டு ஹெலிகாப்டர்களையும் வாடகைக்கு எடுத்துக் கொண்டு வானத்தில் இருந்தும் காட்சிகளை சுட்டுக் கொண்டிருக்கிறார் ஷங்கர்.

படத்தில் எல்லாமே சரியாக நடந்து வந்தாலும் ஒரே ஒரு நபரால் தொல்லை என்கிறார்கள். அவர் தான் ஹீரோயின் சதா. கவர்ச்சியாக நடிக்க மாட்டேன், அந்த டிரஸ் போட்டா கிளாமர் எடுப்பா தெரியும், அது வேணாம் என முரண்டு பிடிக்க அவருக்கும் ஷங்கருக்கும் பலமுறை வாக்குவாம்.

ஏ.வி.எம் ஸ்டுடியோவில் போடப்பட்ட ஒரு செட்டில் பாடல் காட்சி எடுக்கப்பட்டபோது, தொப்புள் தெரிய அரைகுறை டிரஸ்ஸை கொடுத்து சதாவை ஆடச் சொல்லி ஷங்கர் உத்தரவிட, டிரஸ்ஸை போட்டுப் பார்த்துவிட்டு ஓடி வந்துவிட்டாராம். பிறகு விக்ரம் தலையிட்டு சதாவை அந்த உடையை அணிய வைத்தாராம்.

அந்த டிரஸ்சில் ஆடும்போதெல்லாம் முகத்தில் கோபமான எக்ஸ்பிரஷனையே சதா காட்ட மீண்டும் வாக்குவாதமாம். சதாவின் அப்பாவும் சூட்டிங் ஸ்பாட்டில் வந்து சதாக்கிறார் என்கிறார்கள். சதா ரொம்பவே சோதிப்பதாக ஷங்கர் நினைக்கிறாராம்.

இதனால் மிக விரைவில் சதாவை படத்திலிருந்து ஷங்கர் கழற்றிவிடுவார் என்கிறார்கள்.

அதே நேரத்தில் விக்ரமின் ஒத்துழைப்பால் ஷங்கர் மிகவும் அசந்து போய்விட்டார் என்கிறார்கள். படத்துக்கு தொடர்ந்து ஜூன் முதல் நவம்பர் வரை சுமார் 180 நாட்கள் (சுமார் 6 மாதம்) கால்ஷீட் தந்துள்ளாராம் விக்ரம். ஷங்கர் மீது விக்ரம் வைத்திருக்கும் மரியாதை தான் காரணமாம்.

அருள் படத்தில் நடித்துக் கொண்டிருந்தபோதே மீசையை மழி என்று ஷங்கர் சொல்ல பேச்சு மீறாமல் மீசையை மழித்துவிட்டு வந்து நின்றாராம். இதனால் ஷங்கருக்கு சந்தோஷம். ஆனால், அருளை இயக்கிய ஹரி தான் கடுப்பின் உச்சத்துக்கே போய் விக்ரமை வாட்டி எடுத்துவிட்டாராம்.

மீசையை மழித்ததால் ஒட்டு மீசை வைத்து சில பாடல் காட்சிகளில் விக்ரம் நடிக்க வேண்டிய நிலைமை உருவாக, விக்ரமைத் திட்டித் தீர்த்த ஹரி, எங்களைப் பார்த்தா டைரக்டரா தெரியலையா?, ஷங்கர் மட்டும் தான் டைரக்டரா, மீசையை எடுக்க சொன்னா என் படம் பத்தி கவலையே படாம எடுத்திடறதா என்று கருவிக் கொட்டினாராம்.

அருள் தோல்வியடைந்துவிட்ட பின்னர், இப்போது தான் இந்த விவகாரம் வெளியில் வருகிறது.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil