»   »  அடுத்து ஒரே நேரத்தில் இரு படங்கள்... இதான் விக்ரம் 'ஸ்கெட்ச்'!

அடுத்து ஒரே நேரத்தில் இரு படங்கள்... இதான் விக்ரம் 'ஸ்கெட்ச்'!

Posted By:
Subscribe to Oneindia Tamil

விக்ரம் நடித்துவரும் ஸ்கெட்ச் படத்தின் ஷூட்டிங் முழுவதுமாக நிறைவடைந்தது. வி கிரியேசன்ஸ் சார்பில் கலைப்புலி எஸ். தாணு மற்றும் மூவிங் பிரேம் பட நிறுவனம் தயாரிப்பில் பிரமாண்டமாக உருவாகி வரும் படம் ஸ்கெட்ச்'.

வாலு படம் இயக்கிய விஜய் சந்தர் இயக்கத்தில் விக்ரம் - தமன்னா இணைந்து நடிக்கும் இப்படம் வடசென்னை பின்னணியில் உருவாகியுள்ளது. இப்படத்தில் முக்கிய வேடத்தில் ஸ்ரீ பிரியங்கா நடிக்கிறார். இவர்களுடன் சூரி, ஆர்.கே.சுரேஷ், அருள்தாஸ், ஸ்ரீமன் உள்ளிட்டோர் நடிக்கின்றனர்.

Vikram completes Sketch shoot

தமன் இசையமைக்கும் இப்படத்தின் படிப்பிடிப்பு தற்போது முடிந்துவிட்டது. விரைவில் போஸ்ட் புரொடக்‌ஷன்ஸ் பணிகள் தொடங்குகின்றன. படம் வருகிற நவம்பர் மாதம் திரைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

'ஸ்கெட்ச்' படத்தை முடித்த விக்ரம், கௌதம் மேனனின் 'துருவ நட்சத்திரம்' படத்தின் இறுதிக் கட்டப் படப்பிடிப்பில் பங்கேற்கிறார். அதேநேரத்தில் ஹரி இயக்கத்தில் 'சாமி 2' படத்திலும் நடிக்கிறார். இந்த இரு படங்களிலும் ஒரே நேரத்தில் முடித்துவிட்டு, புதிய படத்தில் நடிக்கவிருக்கிறார் விக்ரம்.

English summary
Vikram's Sketch shooting has wrapped up and the actor is going to attend the shoot of Dhuruva Nakhathiram and Saami 2 simultaneously.
Please Wait while comments are loading...

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil