»   »  விக்ரமின் "அந்நியனுக்கு 525 பிரிண்டுகள்!

விக்ரமின் "அந்நியனுக்கு 525 பிரிண்டுகள்!

Subscribe to Oneindia Tamil
விக்ரம் நடிக்கும் அந்நியனுக்கு 525 பிரிண்டுகள் போடப்படுகிறதாம். இந்தப் படம் தான் இந்தியில் வெளியான தேவதாசுக்குஅடுத்த படியாக இந்தியாவிலேயே அதிக பொருட்செலவில் எடுக்கப்பட்டுள்ள படமாம்.

கடந்த வருடம் ஷாருக்கான் நடித்து பெரும் பொருட்செலவில் தயாரான படம் தேவதாஸ்.இப்படத்துக்கு ஆன மொத்த தயாரிப்புசெலவு 35 கோடி ரூபாய்.இது தான் இந்தியாவிலேயே அதிக செலவில் தயாரிக்கப்பட்ட படமாம்.

இதற்கு அடுத்து அதிக பொருட்செலவில் தயாரான படம் என்ற பெருமையைப் பெற்றுள்ளது "அந்நியன். ஆஸ்கார் பிலிம்ஸ்ரவிச்சந்திரன் தயாரிப்பில், ஷங்கர் டைரக்ட் செய்து, விக்ரம் கதாநாயகனாக நடித்துள்ள இந்தப்படம் ஹாலிவுட்டுக்கு இணையாகதயாரிக்கப்பட்டுள்ளதாம்.

ரஜினிகாந்த், கமலஹாசன் ஆகிய சூப்பர் நடிகர்கள் நடிகர்கள் நடித்த பிரமாண்ட படங்களுக்கே இதுவரை 9 கோடி ரூபாய்க்கு மேல்செலவு செய்தது கிடையாதாம். 9 கோடி ரூபாய்க்கு மேல் முதல் போட்டு இதுவரை எந்த தமிழ்ப் படமும் தயாரானதில்லை.

இந்தப் படத்தில் நடிகர், நடிகைகளுக்குத் தேவையான ஆடை, அணிகலன்களுக்கு செலவான பணத்திலேயே ஒரு படத்தைஎடுத்து விடலாமாம். இதற்கு ஆன செலவு எவ்வளவு தெரியுமா? 2 கோடி ரூபாயாம்.

ரஞ்சனும், டி.ஆர்.ராஜகுமாரியும் நடித்து பல வருடங்களுக்கு முன் வெளியான சந்திரலேகா தான் முதன் முதலில் தமிழில் அதிகபொருட்செலவில் தயாரான படம் என்ற பெருமையைப் பெற்றது. அந்த சாதனையை முறியடித்து எம்.ஜி.ஆரின் "நாடோடிமன்னன் பின்னுக்குத் தள்ளியது.

நாடோடி மன்னனின் சாதனையை எம்.ஜி.ஆரே உலகம் சுற்றும் வாலிபனில் முறியடித்தார். தற்போது இந்த எல்லா படங்களின்சாதனையையும் மூட்டை கட்டி வைத்து விட்டது அந்நியன்.

இந்தப் படத்தில் ஒரு பாடல் காட்சியை மலேஷிய விமான நிலையத்தில் 1 கோடி ரூபாய் செலவில் செட் போட்டு எடுத்தார்களாம்.

அசாதரணமான கதையம்சம் கொண்ட படமாக உருவாகும் இதில் விக்ரம் 16 விதமான கெட்டப்புகளில் வருகிறார். படத்தில் 5பாடல்களும், 4 சண்டைக் காட்சிகளும் உள்ளன. ஒரு சண்டைக்காட்சியை சென்னை ஜே.ஜே. இன்டோர் ஸ்டேடியத்தில் 25நாட்கள், 200 காமிராக்களை பயன்படுத்தி எடுத்திருக்கிறார்கள்.

இதில் விக்ரமுடன் வியட்நாம் நாட்டு ஸ்டண்ட் கலைஞர்கள் மோதியுள்ளார்கள்.

மொத்தம் 190 நாட்கள் படப்பிடிப்பு நடந்துள்ளது. இந்தப்படத்தில் மொத்தம் 10,000 பேர் பணிபுரிந்துள்ளனர்.

இவ்வளவு பிரமாண்டமாக படத்தை தயாரித்துவிட்டு போட்ட பணத்தை எடுக்க வேண்டாமா ?. அதற்குத் தான் மொத்தம் 525பிரிண்டுகள் போடப்போகிறார்களாம். (ரஜினியின் சந்திரமுகியை விட அதிகம்)

தமிழ்நாட்டுக்கு மட்டும் மொத்தம் 150 பிரிண்டுகள் போடப்படுகின்றன. ஆந்திராவுக்கு 125, கேரளாவுக்கு 50, மும்பைக்கு 50,கர்நாடகாவுக்கு 25 போக மீதமுள்ள 125 பிரிண்டுகள் வெளிநாடுகளுக்கு அனுப்பப்படுகின்றன.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil