»   »  'கத்திச்சண்டை'யால் காயம் பட்ட விஷால்... படக்குழுவினர் அதிர்ச்சி!

'கத்திச்சண்டை'யால் காயம் பட்ட விஷால்... படக்குழுவினர் அதிர்ச்சி!

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: 'கத்திச்சண்டை' படத்தின் சண்டைக் காட்சியில் நடித்த விஷாலுக்கு தோள்பட்டையில் அடிபட்டது. எனினும் அதனைப் பொருட்படுத்தாமல் அவர் தொடர்ந்து நடித்து வருகிறார்.

மருதுவைத் தொடர்ந்து விஷால் தற்போது சுராஜ் இயக்கத்தில் 'கத்திச்சண்டை' படத்தில் நடித்து வருகிறார்.இதில் விஷாலுடன் இணைந்து தமன்னா, வடிவேலு, சூரி, ஜெகபதி பாபு ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்து வருகின்றனர்.

Vishal Injured in Kaththi Sandai Shooting Spot

இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இப்படத்தின் சண்டைக் காட்சி ஒன்றைப் படமாக்கியபோது விஷாலின் தோள்பட்டையில் அவருக்கு அடிபட்டது.

இதனைத் தொடர்ந்து அருகிலிருந்த மருத்துவமனையில் விஷாலுக்கு முதலுதவி அளிக்கப்பட்டது. காயம் பட்டாலும் கூட படப்பிடிப்பில் விஷால் கலந்து கொண்டு நடித்து வருகிறார்.

இந்த விபத்து குறித்து விஷால் ''தோள்பட்டையில் அடிபட்டுள்ளது. பெரிய அளவில் காயமில்லை. மீண்டும் படப்பிடிப்பில் கலந்து கொண்டு நடித்து வருகிறேன் என்று கூறியிருக்கிறார்.

அடிபட்டும் விஷால் படப்பிடிப்பில் கலந்து கொண்டது படக்குழுவினரை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.

மற்றொருபுறம் விஷாலின் மருது, 'ராயுடு' என்ற பெயரில் இன்று தெலுங்கு மொழியிலும் வெளியாகியிருக்கிறது. 500 க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் வெளியான ராயுடுவுக்கு தெலுங்கிலும் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.

English summary
Vishal Injured in Kaththi Sandai Shooting Spot. He said it is a Regular Injury, now Back to Shoot''.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil