»   »  மாளவிகா..விவேக் கிஸ்

மாளவிகா..விவேக் கிஸ்

Subscribe to Oneindia Tamil

புன்னகை மன்னன் படத்தில் கமல்ஹாசனும், ரேகாவும் நடித்த முத்தக் காட்சியை அப்படியே இமிடேட் செய்து சிங்கக்குட்டி படத்தில் மாளவிகாவுக்கு நச்சென ஒரு இச் கொடுத்துள்ளாராம் விவேக்.

விட்டால் ரஜினியையே தூக்கிச் சாப்பிட்டிருப்பார் விவேக். அந்த அளவுக்கு சிவாஜியில் அவருக்கு, காட்சிகளும், பன்ச் டயலாக்குகளும் அதிகம் வைக்கப்பட்டிருந்தது. இருந்தாலும் ரஜினி ஒரிஜினல் என்பதால் விவேக்கின் அட்டகாசம் ரஜினியைத் தாண்டி ஓடி விடவில்லை.

சிவாஜிக்குப் பிறகு இப்போது விவேக்குக்கு நிறையப் பட வாய்ப்புகளாம். எல்லோரையும் இமிட்டேட் செய்து கலாய்க்கும் விவேக், சிவாஜியையும் விடவில்லை. சமீபத்தில் வெளியான சுந்தர்.சி.யின் வீராப்பு படத்தில் சிவாஜி ரஜினி கெட்டப்பை இமிடேட் செய்து கலக்கியிருந்தார்.

அடுத்து கமல்ஹாசனை வம்புக்கு இழுக்கப் போகிறார். புன்னகை மன்னனில் காதலர்களான கமல்ஹாசனும், ரேகாவும் தற்கொலை செய்து கொள்ள முடிவெடுத்து மலை உச்சிக்குப் போவார்கள். கட்டக் கடைசியாக ஒரு டூயட் பாட்டை பாடி முடித்து விட்டு, மலை உச்சியில் உள்ள நீர்வீழ்ச்சிக்கு வருவார்கள்.

அங்கு கண் கலங்க நின்றபடி ரேகாவுக்கு, உதடு கலங்க முத்தம் கொடுப்பார் கமல். பின்னர் இருவரும் அங்கிருந்து விழுவார்கள். தமிழ் சினிமா இலக்கணப்படி ஹீரோ மட்டும் சாகாமல் மரக்கிளையில் சிக்கித் தொங்கியபடி தப்பி விடுவார்!!!

இந்தக் காட்சியைத்தான் விவேக் சிங்கக்குட்டி படத்தில் இமிடேட் செய்துள்ளார். இதற்காக அதே மலையில் வைத்து காட்சியை சுட்டுள்ளனர். விவேக்குடன், ரேகா வேடத்தில் மாளவிகா நடித்தாராம். ரேகாவுக்கு கமல் எப்படிக் கிஸ் கொடுத்தாரோ, தெரியாது, ஆனால் மாளவிகாவுக்கு விவேக் கொடுத்த இச், படு நச் ஆக உள்ளதாம்.

அந்த அளவுக்கு மாளவிகா, விவேக் லிப் லாக் படு அசத்தலாக வந்துள்ளதாம். சிங்கக்குட்டி படத்தின் ஹீரோ யார் தெரியுமா, நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் பேரன் ஜூனியர் சிவாஜிதான்.

ராம்குமாரின் மகன்தான் இந்த ஜூனியர் சிவாஜி. இவரது தாயார், நடிகை ஸ்ரீபிரியாவின் அக்கா என்பது கூடுதல் செய்தி!

என்ன ரொம்ப குழப்புதா...

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil