»   »  சூட்டிங் ஸ்பாட்

சூட்டிங் ஸ்பாட்

Posted By:
Subscribe to Oneindia Tamil

விவேக்குக்கும், கருணாஸுக்கும் இடையே கலாட்டா ஸ்டார்ட் ஆகி விட்டதாம்.

நந்தா படத்தின் மூலம் படு பிசியான காமடி நடிகராக மாறியுள்ள பாப் பாடகர் கருணாஸ் இப்போது கை நிறையப்படங்களுடன் நடித்து வருகிறார். அவரது வளர்ச்சி, விவேக்கின் சான்ஸ்களைக் குறைத்துள்ளதாம்.

இதனால் இருவருக்கும் இடையே பூசல் ஏற்பட்டு காரசாரமான வாக்கு வாதமும் நடந்துள்ளதாம்.

படங்களில் ஹீரோக்களுக்கு சமமாகப் பேசப்பட்டுவிடுகிறார் விவேக். இதனால் இளம், முன்னணி நடிகர்கள்விவேக் தங்களது படங்களில் வேண்டாம் என்று கூறி வருகின்றனர்.

இதனால் அந்த சான்ஸ்கள் எல்லாமேகருணாசுக்குப் போய்க் கொண்டிருக்கின்றன.

இதனால் அப்செட் ஆகிப் போன விவேக், கே.பாலச்சந்தரின் கவிதாலயாவில் தனக்குள்ள செல்வாக்கைப்பயன்படுத்தி, விஜய் நடிக்கும் திருமலை படத்தில் முக்கிய காமெடி டிராக்கைக் கைப்பற்றி விட்டார்.

முதலில் இந்தரோல் கருணாசுக்குத் தான் போவதாக இருந்தது. இப்போது அந்தப் படத்தில் கருணாசுக்கு குட்டியான காமெடிவேடம் மட்டுமே மிஞ்சியுள்ளது.

இதனால் ஆத்திரமடைந்த கருணாஸ், விவேக்கிடமே நேரடியாக சென்று வாக்குவாதம் செய்தாராம். பதிலுக்குவிவேக்கும் பேச வாக்குவாதம் முற்றிவிட்டதாம். இதையடுத்து இருவரையும் சமாதானப்படுத்தியுள்ளனர் செட்டில்இருந்தவர்கள்.

தனது விருப்பத்தையும் மீறி விவேக்கை சேர்த்துள்ளதால், விஜய்க்கும் அதிருப்திதானாம். ஆனாலும்,தயாரிப்பாளர் பாலசந்தர் என்பதால் பிரச்சினை பண்ணாமல் விட்டு விட்டார் என்கிறார்கள்.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil