»   »  நான் கவுண்டமணி விசிறி-வடிவேலு

நான் கவுண்டமணி விசிறி-வடிவேலு

Posted By:
Subscribe to Oneindia Tamil
Vadivelu with Shreya

அண்ணன் கவுண்டமணியின் பரம விசிறிகளில் நானும் ஒருவன். திரையுலகில் நான் ஹீரோவாக மதிப்பவர்களில் அவரும் ஒருவர் என்று கவுண்டமணிக்கு புகழாரம் சூட்டியுள்ளார் வடிவேலு.

வடிவேலு நடிக்க வந்த புதிதில் கவுண்டமணியுடன் இணைந்து சில படங்களில் நடித்துள்ளார். ஆனால் திடீரென இருவருக்கும் பிரச்சினையாகி விடவே, பரம போட்டியாளர்களாக மாறி விட்டனர்.

இந் நிலையில் கவுண்டமணியைப் புகழ்ந்துள்ளார் வடிவேலு. அவர் இதுதொடர்பாக அளித்த பேட்டியில், இன்றும் கூட நான் அண்ணன் கவுண்டமணியின் காமெடிக் காட்சிகளை ரசித்துப் பார்க்கிறேன். எனது காலத்தின் காமெடி ஹீரோக்களில் அவரும் முக்கியமானவர்.

அடித்து, உதைத்து காமெடி செய்வதை சிலர் விமர்சிக்கிறார்கள். ஆனால் டாம் அண்ட் ஜெர்ரி காமெடியை பாருங்கள். அதில் போடும் சண்டையை, அது கார்ட்டூன்தான். என்றாலும் கூட நானும் சின்னப்புள்ளை மாதிரி ரசித்துப் பார்க்கிறேன்.

எங்களது காமெடி டிராக்குகளுக்கும் கூட டாம் அண்ட் ஜெர்ரிதான் மூலக் களம். மக்கள் அப்படிப்பட்ட காமெடிக் காட்சிகளை ரசிக்கிறார்கள் என்றால், அப்படி நடிப்பதில் தவறில்லையே? என்றார் வடிவேலு.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil