twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    ரஜினி ஒரு விவேகானந்தர்- பாலச்சந்தர்

    By Staff
    |

    K Balachander with Vijay
    புகழிலும் செல்வாக்கிலும் ரஜினி ஒரு விவேகானந்தர் மாதிரி என்றார் கே.பாலச்சந்தர்.

    கவிதாலயா- செவன் ஆர்ட்ஸ் நிறுவனங்கள் கூட்டாகத் தயாரிக்க, சூப்பர்ஸ்டார் ரஜினி நடிக்கும் குசேலன் திரைப்படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா நேற்று மாலை சென்னை லீ ராயல் மெரிடியனில் நடந்தது. இப்படத்தின் தெலுங்குப் பதிப்பான கதாநாயகுடு பட ஆடியோவும் இதே மேடையில் நடந்தது.

    ரஜினியின் குரு கே.பாலச்சந்தர் முதல் சிடியை வெளியிட, இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் பெற்றுக் கொண்டார்.

    தமிழ் தெலுங்கு திரையுலகின் முக்கிய நட்சத்திரங்கள் பங்கேற்ற இந்த நிகழ்ச்சியில் கே.பாலச்சந்தர் பேசியதாவது;

    குசேலன் முழுக்க முழுக்க ரஜினியோட படம். அவர் இல்லைன்னா இந்தப் படமே கிடையாது.

    ரஜினியை நான்தான் கண்டுபிடிச்சதா சொல்றது மகா தவறு. அவர் ஏற்கெனவே ஒரு வைரமாக இருந்தார். அந்த வைரத்துக்கு பாலீஷ் போட்ட பெருமை மட்டும்தான் எனக்கு. இன்று எனக்கு அவர் செய்திருக்கும் உதவி மகத்தானது. அதை இந்த இடத்தில் நான் சொல்லியே தீர வேண்டும்.

    எனக்கும் ரஜினிக்கும் உள்ள தொடர்பு வெறும் குரு - சிஷ்ய உறவு மாத்திரமல்ல. ராமகிருஷ்ண பரமஹம்சருக்கும் விவேகானந்தருக்குமிடையே இருந்த உறவு போன்றது. நான் ராமகிருஷ்ணர் என்று என்னைச் சொல்லிக் கொள்ளவில்லை. ஆனால் ரஜினி விவேகானந்தர் மாதிரிதான்.

    எதற்காக இந்த ஒப்புமையைச் சொல்கிறேன் என்றால், ராமகிருஷ்ணர் விவேகானந்தருக்கு குரு. ஆனால் அவரை இந்தியாவுக்கு மட்டும்தான் தெரியும். அவர் சீடர் விவேகானந்தரை உலகமே அறியும். அப்படித்தான் ரஜினியும். அமெரிக்காவில் போய் பாலச்சந்தர் என்றால் எத்தனைப் பேருக்குத் தெரியும். அதுவே ரஜினி என்றால்... அப்படி ஒரு மகத்தான சக்தியும் வசீகரமும் கொண்டவர் ரஜினி.

    ரஜினியின் கொள்கைகள், அவர் கடைப்பிடிக்கும் மனிதாபிமானம் மகத்தானவை. ரஜினிக்கு நான் குரு என்பதில் எனக்குத்தான் மிகவும் பெருமை, என்றார்.

    படத்தின் இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் பேசுகையில், ரஜினி சாரின் மிகத் தீவிர விசிறி நான், உங்களைப் போலவே. அவர் படத்துக்கு நானும் ஒரு நாள் இசையமைப்பேன் என்பதை கனவிலும் நினைக்கவில்லை. என் வாழ்க்கையில் மிகவும் சந்தோஷமான நாள் இது, என்றார்.

    இயக்குநர் வாசு, இசையமைப்பாளர் ஏஆர் ரகுமான் ஆகியோரும் பேசினர். இந்த விழாவின் முக்கிய விருந்தினர்களில் இயக்குநர் பாரதிராஜாவும் ஒருவர்.

    இந்தப் படம் நண்பர்களின் உணர்ச்சிப்பூர்வமான கதை என்பதால் விழாவுக்கு வந்திருந்த விஐபிக்கள் தங்கள் நண்பர்களுக்கு குசேலன் ஆடியோ சிடிக்களைக் கொடுத்து மகிழ்ந்தனர்.

    பாரதிராஜா நெகிழ்ச்சி

    குறிப்பாக பாலச்சந்தர், தன் நண்பர் ஒரே நண்பர் என பாரதிராஜாவை அழைத்து சிடியை வழங்கியபோது, பாரதிராஜா கண்கலங்கினார்.

    இந்த வார்த்தை எனக்கு பத்மஸ்ரீ விருதைவிட உயர்வானது, என்று நெகிழ்ந்தர் பாரதிராஜா. பின்னர் அவர் பேசுகையில், ரஜினிக்கும் எனக்கும் எப்போதுமே ஆழமான நட்பு உண்டு. மாச்சரியங்களை வென்ற நட்பு அது. அவர் மிகச் சிறந்த மனிதன். இன்றைக்கு நல்ல மனிதர்கள் நிறைய பேர் நாட்டுக்குத் தேவை. ரஜினியின் மனிதாபிமானமும் உழைப்பும் அவரது நேர்மையும்தான் உலகில் யாருக்கும் கிடைக்காத மிகப் பெரிய இடத்தை திரைத்துறையில் அவருக்குக் கிடைக்க வைத்திருக்கிறது என்றார்.

    உண்மை, வெறும் புகழ்ச்சியில்லை!

    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X