twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    டிவியில் ஆபாச காட்சிகளுக்கு தடை-உயர் நீதிமன்றத்தில் வழக்கு

    By Staff
    |

    சென்னை: டிவிக்களில் வன்முறை காட்சிகளும், வரம்புமீறிய ஆபாச காதல் காட்சிகளும் பெருகிவிட்டது. இது போன்ற நிகழ்ச்சிகளை தடுக்க வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றத்தில் பொது நல மனு தொடரப்பட்டுள்ளது.

    இது தொடர்பாக சென்னையை சேர்ந்த வக்கீல் அலெக்ஸ் பென்ஷிகர், பாதிரியார் பான்கிராஸ், ஆரோக்கிய தாஸ் மற்றும் லினாடு வசந்த் ஆகியோர் தாக்கல் செய்த பொது நல மனுவில் கூறப்பட்டுள்ளதாவது...

    மக்களின் முக்கிய பொழுதுபோக்கு சாதனம் டிவி தான். ஆனால், இவை எந்த தணிக்கையும், சுய கட்டுப்பாடும் இல்லாமல் செயற்கைகோள் இணைப்பு மூலம் ஒளிபரப்பாகி வருகின்றன. தற்போது இதில் ஆபாச காட்சிகள், வன்முறை காட்சிகள் அதிகரித்து வருகின்றன.

    குற்றவாளிகளுக்கு பரிதாபம் காட்டுவது, ஒழுக்கம் தவறி நடப்பது போன்ற காட்சிகள் நிறைய வருகின்றன.

    முறையற்ற நடனங்கள், பெண்களை சித்ரவதை செய்வது , கொலை, மது, புகைப்பிடிக்கும் காட்சிகள், வரம்பு மீறிய காதல் காட்சிகள் போன்றவையும் அடிக்கடி ஒளிபரப்பப்படுகின்றன.

    இது போன்ற காட்சிகள் கதைக்கு தேவையில்லாத சமயத்திலும் ஒளிபரப்பப்படுகிறது. ஆனால் இவர்கள் மீது கேபிள் டிவி ஒளிபரப்பு சட்டத்தின்கீழ் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

    குடும்ப உறவுகள் பாதிக்கப்படுகிறது...

    இதுபோன்ற காட்சிகளினால் இளைஞர்கள் பாதிக்கப்படுவதுடன், குடும்ப உறவு, மாமியார், மருமகள் உறவு போன்றவை சீர்குலையும்.

    எனவே சமுதாய நலன்கருதி இதுபோன்ற காட்சிகளை தடை செய்யவேண்டும் என்று சம்பந்தப்பட்ட டிவிகளுக்கு நோட்டீஸ் அனுப்பினோம்.

    திருமண வாழ்க்கை முடிவுகள் தற்போது நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. டிவியில் வரும் தேவையில்லாத காட்சிகளை பார்ப்பது மூலம் பலர் விவாகரத்து செய்யும் அளவிற்கு மனநிலை பாதிக்கப்படுகிறார்கள். குழந்தைகளின் மனநிலையையும் பாதிக்கிறது.

    எங்களது நோட்டீஸ்க்கு இரண்டு டிவிக்கள் மட்டும் பதில் அளித்தன. ஆனால் அவர்கள் பதிலும் திருப்தியாக இல்லை. எனவே தேவையில்லாத, விரும்பத்தகாத காட்சிகளை ஒளிபரப்ப தடை செய்யவேண்டும் என அந்த மனுவில் கூறப்பட்டிருந்தது.

    மத்திய அரசுக்கு நோட்டீஸ்...

    இந்த மனுவை விசாரித்த தலைமை நீதிபதி எச்எல் கோகலே, நீதிபதி டி முருகேசன் ஆகியோர் அடங்கிய பெஞ்ச், மத்திய அரசு, மத்திய சினிமா தணிக்கைத்துறை, பிரச்சார் பாரதி ஆகியவை நான்கு வாரத்தில் பதில் தரும்படி அவர்களுக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டது.

    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X